Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

யோகாவும்... தியானமும்... ஏன் அவசியம்... தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!


சிரிக்க மட்டுமே !!
ராமு : உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
சோமு : தெரியல..
ராமு : பல் டாக்டருக்குத்தான்.
சோமு : எப்படி?
ராமு : அவர்தான் எல்லாரோட 'சொத்தை"யும் பிடுங்குராறே.
சோமு : 😣😣
-------------------------------------------------------------------------------------------------------------
அம்மா : டேய்... ஏன்டா முடிய நீளமா வளத்துகிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிக்கிட்டு அலையுற...?
பையன் : இதுதாம்மா இப்போ ஃபேஷன்.
அம்மா : நாயே... உங்க அக்காவ பொண்ணு பாக்க வந்தவங்க உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காங்க...
பையன் : 😝😝
-------------------------------------------------------------------------------------------------------------

யோகவும்... தியானமும்...!!
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது யோகா...
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது தியானம்.

யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே.

-------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
புதிதாக திருமணமான தம்பதியர் ஒரு புதிய நகரத்திற்கு குடியேறினார்கள்.

அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும்போது, பக்கத்து வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டு கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது.

அதை பார்த்த மனைவி கணவனிடம் அங்கே பாருங்க, அந்த பெண்ணிற்கு துணி துவைக்கவே தெரியவில்லை. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளாக இருக்கிறது என்று கூறினாள்.

ஜன்னல் வழியாக பார்த்த கணவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

பக்கத்து வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போடுவதும், அதை ஜன்னல் வழியாக பார்த்து துவைக்க தெரியவில்லை என்று மனைவி சொல்வதும், கணவன் அதற்கு எதுவுமே சொல்லாமல் இருப்பதும் நீண்ட நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

திடீரென்று ஒருநாள் மனைவி மிகவும் ஆச்சரியமாக சொன்னாள்.... இங்கே பாருங்க! கடைசியில் நம்ம பக்கத்து வீட்டு பெண் நன்றாக துணி துவைக்க கற்றுக்கொண்டாள்... துணியில் கருப்பு புள்ளிகளே இல்லை என்று கூறினாள்.

அதற்கு அவளின் கணவன் வேறு ஒன்றும் இல்லை... இன்று காலையில் நம் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகளை துடைத்தேன்... என்று கூறிவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தான்.

நீதி :

அடுத்தவரின் செயல்கள் நமக்கு குறைகளாக தெரிவது... நமது பார்வை குறைபாடாகக்கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக