சிரிக்கலாம் வாங்க...!
(கணவனும், மனைவியும் ரோட்டில் நடந்து செல்லும்போது ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடியது.)
மனைவி : என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்யுறாரு பாருங்க... யாருங்க இது?
கணவன் : (கோபத்தை அடக்கியபடி) என் மாமனார்தானே போறாரு... உனக்கு அவரைத் தெரியாதாக்கும்...
மனைவி : 😏😏
---------------------------------------------------------------
ராமு : கடலை எண்ணெய் என்ன விலைங்க?
கடைக்காரர் : 130 ரூபாய்.
ராமு : எப்போ குறையும்?
கடைக்காரர் : அளந்து ஊத்தும் போதுதான்!!
ராமு : 😬😬
---------------------------------------------------------------
இது உண்மைதானே?...
இது உண்மைதானே?...
ஆடம்பர வாழ்க்கை ஐம்பது வயதில் கூட வரும்...
ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை அந்தந்த வயதில் மட்டுமே வரும்...
அதனால் ஆசைப்பட்டதை அப்போதே வாழ்ந்து விடு...
---------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
சிறந்த வரிகள்...!!
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு...
பலமான ஆயுதம் பொறுமை...
மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை...
அற்புதமான மருந்து புன்னகை...
---------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
விளக்கம் :
அடக்கத்தை உறுதி பொருளாக கொண்டு போற்றி காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
---------------------------------------------------------------
விடுகதைகள் !!
விடுகதைகள் !!
1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?
2. அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
3. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
4. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
5. பூமியிலே பிறக்கும், புகையாய் போகும். அது என்ன?
விடைகள் :
1. மிருதங்கம்.
2. சாம்பிராணி.
3. வளையல்.
4. மதி.
5. பெட்ரோல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக