Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

10-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

அங்காரகன், குஜன், மங்களன், பௌமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவகிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவர். சகோதர காரகன் இவரே.

செவ்வாய் சிவப்பு நிறம், மருத்துவம், விளையாட்டு, அதிகாரம் ஆகியவற்றிற்கு அதிபதி.

ஜோதிட சாஸ்திரத்தில் சக்திமிக்க 5 கிரகங்களில் செவ்வாய்க்கு தனி இடமுண்டு. செவ்வாயை 'அங்காரகன்" என்றும், 'வீரத்திற்கு அதிபதி" என்றும் அழைப்பார்கள். ஒருவரின் கோபம், முரட்டுக்குணம் ஆகியவற்றிற்கு செவ்வாய் பொறுப்பாகிறார்.

லக்னத்தில் 10-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும்.

10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

👉 புதியதை கற்கும் ஆர்வம் உடையவர்கள்.

👉 எதிலும் திறமையுடன் செயல்படக்கூடியவர்கள்.

👉 செல்வ சேர்க்கை உடையவர்கள்.

👉 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 கீர்த்தி மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

👉 உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

👉 கல்வியில் ஆர்வம் உடையவர்கள்.

👉 குறை சொல்பவர்களை விரும்பமாட்டர்கள்.

👉 பெரிய மனிதர்களின் தொடர்புகளை உடையவர்கள்.

👉 வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

👉 முயற்சிக்கு ஆதரவான சூழலை உருவாக்குவார்கள்.

👉 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

👉 நெருப்பு சார்ந்த பணிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

👉 உறவினர்களால் சிறு மனவருத்தங்கள் உண்டாகும்.

👉 தொழிற்சாலை சார்ந்த பணிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!