>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 5 மே, 2020

    பக்தவத்சலப்பெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை

    பக்தவத்சலப்பெருமாள் கோவில தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.
    இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.

    மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 
    பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை
    பெயர்புராண பெயர்(கள்):லட்சுமி வனம்,

    ஸப்தாம்ருதஷேத்ரம்பெயர்:

    பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை

    அமைவிடம் ஊர்:

    திருக்கண்ணமங்கை

    மாவட்டம்:

    திருவாரூர்

    மாநிலம்:

    தமிழ்நாடு

    நாடு:

    இந்தியா

    கோயில் தகவல்கள்

    மூலவர்:

    பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் (விஷ்ணு நின்றகோலம்,பிரமாண்ட திருவுருவம்)

    உற்சவர்:

    பெரும் புறக் கடல்

    தாயார்:

    கண்ணமங்கை நாயகி

    உற்சவர் தாயார்:

    அபிஷேகவல்லி

    தீர்த்தம்:

    தர்சன புஷ்கரணி

    மங்களாசாசனம் பாடல் வகை:

    நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்மங்களாசாசனம்.

    செய்தவர்கள்:

    திருமங்கையாழ்வார் கட்டிடக்கலையும் பண்பாடும்

    கட்டடக்கலை வடிவமைப்பு:

    திராவிட கட்டடக்கலை

    விமானம்:

    உட்பல (உத்பல) 

    விமானம்கல்வெட்டுகள்:

    உண்டு

    தொலைபேசி எண்:

    91-4366- 278288

    தல வரலாறு

    மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

    திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.

    பாத்ம புராணம்

    பாத்ம புராணம் 5வது காண்டத்தில் 81 முதல் 87 முடிய உள்ள 7 அத்தியாயங்களில் இத்திருத்தலம் குறித்து கூறப்படுகின்றது.

    மூலவர் பெயர்க்காரணம்

    மூலவரின் ஒரு பெயரான பத்தராவி (பக்தர்+ஆவி) என்பது பக்தர்களுக்கு வேகமாக வந்து அருளுவதால் அமைந்தது.

    அமைவிடம்

    இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. 

    கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

    கோவில் நுழைவாயில்

    பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜ கோபுரம் கொண்டுள்ளது.[3] ராஜ கோபுரத்தை அடுத்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, அபிஷேகவல்லித்தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவப்பெருமாள் சன்னதி, மணவாளமாமுனிகள் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன் பட்சிராசன் சன்னதி உள்ளது. சாலையின் எதிர்ப்புறம் கோயிலுக்கு எதிரே அனுமார் சன்னதி உள்ளது.

    மூலவர்

    பக்தவத்சலப் பெருமாள். இவர் பக்தராவிப் பெருமாள் என்றும் அறியப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

    தாயார்

    அபிஷேகவல்லித் தாயார்.

    விமானம்

    உட்பல விமானம்.

    தல விருட்சம்

    மகிழம்

    தீர்த்தங்கள்

    தர்சண புஷ்கரணி தீர்த்தம்

    திருவிழா

    ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா.

    மங்களாசாசனம்தொகு

    திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தினை, பாடியுள்ளனர்.

    பஞ்சகிருஷ்ண தலங்கள்

    சப்தமிர்த தலம்

    இத்தலத்தில்,

    விமானம்மண்டபம்வனம்ஆறுகோவில் அமைவிடம்ஊர்புஷ்கரணி

    ஆகிய ஏழும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் சிறப்பைக் கொண்டமைந்துள்ளதால், இத்தலம் சப்தமிர்த தலம் என அழைக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக