>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 19 பிப்ரவரி, 2020

    எல்லா நேரங்களிலும் இப்படி இருந்தால்... நிம்மதியாக வாழலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
    மோகன் : கடைசி பெஞ்சுல உக்காந்திருப்பவர்களுக்கே அறிவு அதிகம்-னு ஒரு ஆய்வு சொல்லுது...
    குமார் : ஆமா.. யாரு அந்த ஆய்வை நடத்துனாங்க...
    மோகன் : என்கூட கடைசி பெஞ்சுல உக்காந்து இருந்தவனுங்கதான்...😆
    குமார் : 😳😳
    ---------------------------------------------------------------------------------------------------------
    அப்பா : ஏன்டா மார்க் இவ்ளோ கம்மியா வாங்கியிருக்க?... உன்ன என் புள்ளைன்னு சொல்லவே வெக்கமா இருக்கு...
    மகன் : உன்ன யாருப்பா புள்ளைன்னு சொல்ல சொன்னது... மச்சின்னு சொல்லு...
    அப்பா : 😡😡
    ---------------------------------------------------------------------------------------------------------
    கோபம்...!!
    ஓர் அரசன் மிகவும் முன்கோபக்காரனாக இருந்தான். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்திருந்தார்.

    அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன். அவர் மன்னனிடம், என்னிடம் அதிசயமான பொன்னால் செய்த குவளை ஒன்று உள்ளது. அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம், இல்லாமல் போய்விடும் என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்.

    உனக்கு சினம் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பி குடி... பிறகு சினமே வராது என்று கூறிவிட்டு சென்றார். அன்றிலிருந்து அரசன் அவ்வாறு செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

    பல வருடங்கள் சென்றன. அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார். அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவளையை கொடுத்தற்காக பலமுறை நன்றி கூறி தன் மகிழ்ச்சியை தெரிவித்தான்.

    மன்னனே...! நான் உன்னை ஏமாற்ற விரும்பவில்லை. நான் உன்னிடம் கொடுத்த குவளை அதிசயமான குவளை அல்ல... சாதாரண குவளைதான்.
    சினம் வரும்போது சிந்திக்க தெரியாது... சிந்தனை வந்தால் சினம் தானாக குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும்போது நேரம் கிடைக்கிறது.

    அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்கு தன் இடத்தை கொடுக்கிறது என்று கூறினார்.

    மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும் அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    நாம் கோபப்படும் போதும், மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும் நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக