Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

“பேங்க் ஆஃப் பரோடாவின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்யலாம்” அதிரடி காட்டிய கொல்கத்தா உயர் நீதிமன்றம்!


 பேங்க் கேரண்டி
லைப்பைப் படித்த உடன் குண்டு தூக்கி போட்டது போல இருந்ததா..? அப்படி என்ன பிரச்சனை வந்து விட்டது..?
ஏன் கொல்கத்தா உயர் நீதிமன்றம், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் உரிமத்தை, தேவைப்பட்டால், மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்யலாம் எனச் சொன்னது..?
எந்த வழக்குக்கு, இப்படி ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்? இப்படி அதிரடி காட்டிய நீதிபதிகளின் பெயர் என்ன..? வாருங்கள் எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன் பேங்க் கேரண்டியில் இருந்து தொடங்குவோம்.
பேங்க் கேரண்டி
உதாரணமாக: ராஜா என்பவர் ஒரு உணவகம் நடத்துகிறார். இவர் 1 கோடி ரூபாய்க்கு சமையலறைக்குத் தேவையான புதிய சாதனங்கள் மற்றும் பாத்திர பண்டங்களை, குமார் & கோ கம்பெனியில் இருந்து வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
நம்பிக்கை இல்லை
இப்போது ராஜாவின் உணவகத்தை நம்பி, குமார் & கோ சரக்கைக் கொடுக்க முன் வரவில்லை. ஏன் என்று கேட்டால் "உங்களை எனக்கு முன் பின் தெரியாது. நீங்கள் சரக்கை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது" என பயப்படுகிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது தான் பேங்க் கேரண்டி உள்ளே வருகிறது.
வங்கி உத்திரவாதம்
இப்போது ராஜா, தன் வியாபாரம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று, ஒரு கோடி ரூபாய்க்கு பேங்க் கேரண்டி கேட்பார். வங்கியும் ராஜா இதற்கு முன் கடன் வாங்கி திருப்பிச் செலுத்திய கடந்த கால வரலாற்றை எல்லாம் பார்த்து தான் பேங்க் கேரண்டி கொடுக்கும். இப்போது ஒரு கோடி ரூபாய்க்கு பேங்க் கேரண்டி கொடுத்துவிட்டார் என்றால், இந்த பேங்க் கேரண்டியை குமார் & கோ கம்பெனியிடம் கொடுக்கலாம்.
பேங்கில வாங்கிக்குங்க
இந்த பேங்க் கேரண்டியைக் கொடுக்கும் போதே, "நான் ஒழுங்காக சொன்ன படி உங்களுக்கு பணத்தைக் கொடுத்துவிடுவேன். ஒருவேளை நான் சொன்ன படி பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், நீங்கள் என் பேங்க் கேரண்டியை வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்" எனச் சொல்லிக் கொடுப்பார்.
வாங்கிக் கொள்ளலாம்
உண்மையாகவே, ராஜாவால், சொன்ன படி பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால், குமார் & கோ அந்த பேங்க் கேரண்டியைப் பயன்படுத்தி, பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது தான் பேங்க் கேரண்டியின் சுருக்கம். பேங்க் கேரண்டியில் சில வகைகள் இருக்கின்றன. அதை எல்லாம் சொல்லி உங்களைக் குழப்பாமல் நேரே விஷயத்துக்கு வருகிறேன்.
பஞ்சாயத்து
கடந்த 2017-ம் ஆண்டு, Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனம், Simplex Projects Ltd என்கிற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் படி அஸ்ஸாம் மாநிலத்தில் Bongaigaon என்கிற பகுதியில் ஒரு வேலையைச் செய்ய வேண்டும்.
பஞ்சாயத்து தொடர்ச்சி 1
அதற்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அட்வான்ஸ் தொகையாகக் கொடுத்தது. இந்த அட்வான்ஸ் தொகையைப் பெற Simplex Projects Ltd நிறுவனம் 6.97 கோடி ரூபாய்க்கு ஒரு நிபந்தனை இல்லாத பேங்க் கேரண்டியை (Unconditional Bank Guarantee) செக்யூரிட்டி டெபாசிட்டாக கொடுத்தது. பேங்க் கேரண்டி கொடுத்த வங்கி தான் பேங்க் ஆஃப் பரோடா.
பஞ்சாயத்து தொடர்ச்சி 2
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பார்த்தால் ஒரு வேலையும் நடக்கவில்லை. எனவே Simplex Projects Ltd நிறுவனம் கொடுத்த பேங்க் கேரண்டியை பயன்படுத்தி, பணத்தை பெற முயற்சித்து இருக்கிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். ஆனால் பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணத்தைத் தரவில்லை.
டெல்லியில் வழக்கு
Simplex Projects Ltd கொடுத்த பேங்க் கேரண்டியை வைத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணத்தை வாங்க முயற்சித்த விஷயம் தெரிந்த உடனேயே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் Arbitration and Conciliation Act, 1996, சட்டப் பிரிவு 9-ன் கீழ் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் களத்தில் இறங்கி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தது.
டெல்லி தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம், பேங்க் ஆஃப் பரோடா கொடுத்த நிபந்தனைகள் இல்லாத பேங்க் கேரண்டிக்கு உரிய பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆச்சர்யம் என்ன என்றால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணத்தைக் கொடுக்கவில்லை.
ஏன் கொடுக்கவில்லை
பேங்க் கேரண்டிக்கான பணத்தை, Simplex Projects Ltd நிறுவனம் கொடுக்க வில்லை என காரணம் சொன்னது. இதனால் தான் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் மீது, பேங்க் கேரண்டிக்கான பணத்தைக் கேட்டு ஒரு வழக்கு தொடுத்தது.
தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களுடன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்ஜீப் பேனர்ஜி (Sanjib Banerjee) மற்றும் கெளசிக் சந்தா (Kausik Chanda) கடந்த பிப்ரவரி 10, 2020 அன்று "கொடுத்த பேங்க் கேரண்டிக்கு பணத்தை கொடுக்காததற்கு, பேங்க் ஆஃப் பரோடா மீது, ஆர்பிஐ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ஹைலைட்
இரு தரப்பு வாதங்களுடன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்ஜீப் பேனர்ஜி (Sanjib Banerjee) மற்றும் கெளசிக் சந்தா (Kausik Chanda) கடந்த பிப்ரவரி 10, 2020 அன்று "கொடுத்த பேங்க் கேரண்டிக்கு பணத்தை கொடுக்காததற்கு, பேங்க் ஆஃப் பரோடா மீது, ஆர்பிஐ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக