Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூலை, 2020

ஓரெழுத்து வினாக்கள்... இது உங்களுக்கு தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------
சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க...!!
-----------------------------------------------------------

ஒருவர் Bangalore-க்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். Bangalore வந்தவுடன்,

பயணி : (சத்தமாக...) Bangalore
கண்டக்டர் : பி சைலண்ட்...
பயணி : Angalore
கண்டக்டர் : 😳😳
-----------------------------------------------------------
ராஜு : சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா?
தீபக் : தெரியாதே...
ராஜு : ரொம்ப நல்லதா போச்சு. இந்த நூறு ரூபாயை மாற்றிக் கொடுங்க...
தீபக் : 😑😑
-----------------------------------------------------------
ராமு : திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
காவலர் : அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே?
ராமு : 😠😠
-----------------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே...!!
-----------------------------------------------------------
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, இறந்து விட்டான் என்று சொன்னார்.

அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்றான்.

அருகிலிருந்த அவனுடைய மனைவி, பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது? என்றாள்.

-----------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

விளக்கம் : 

பகைவரைக் கண்டு பயப்படாமல் இருப்பது ஆண்மை. ஆனால் அதே பகைவரின் துன்ப காலத்தில், அவர்மீது இரக்கம் கொண்டு உதவுவதே ஆண்மையின் உச்சம் என்று புகழப்படுகிறது.
-----------------------------------------------------------
ஓரெழுத்து வினாக்கள்... இது உங்களுக்கு தெரியுமா?
-----------------------------------------------------------
😀 சிரிக்கும் எழுத்து - ஈ

🙋 அழைக்கும் எழுத்து - வா

💁 கேட்கும் எழுத்து - தா

🙅 துரத்தும் எழுத்து - போ

😡 வெறுக்கும் எழுத்து - சீ

🤝 உதவும் எழுத்து - கை

🖋 பூசும் எழுத்து - மை

😫 வலிக்கும் எழுத்து - ஆ

🔥 சுடும் எழுத்து - தீ

🌹 மலரும் எழுத்து - பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக