-----------------------------------------------------------------------
கலக்கலான கடி ஜோக்ஸ்...!!
-----------------------------------------------------------------------
ராணி : பஸ்-ஐ 'பின்"னால தள்ளுனா என்ன ஆகும்?
தேவி : பின்னாடிதான் போகும்...
ராணி : இல்ல... பின் வளைஞ்சு போயிரும்...
தேவி : 😏😏
-----------------------------------------------------------------------
ராஜா : நகை கடைக்காரருக்கு பிடிச்ச சோப் எது?
பாபு : தெரியலையே...
ராஜா : பொன்வண்டு.
பாபு : 😂😂
-----------------------------------------------------------------------
வாழ்க்கை ஒரு...!!
-----------------------------------------------------------------------
வாழ்க்கை ஒரு 'வரம்" என்றால் அதில் நாம் 'அதிர்ஷ்டசாலி"...
வாழ்க்கை ஒரு 'அறிவியல்" என்றால் அதில் நாம் 'விஞ்ஞானி"...
வாழ்க்கை ஒரு 'போராட்டம்" என்றால் அதில் நாம் 'போராளி"...
வாழ்க்கை எப்படி இருந்தாலும் நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்..!!
-----------------------------------------------------------------------
பொன்மொழிகள்...!!
-----------------------------------------------------------------------
🌟 முடியாது என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.
🌟 உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது.
🌟 இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
🌟 அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
🌟 மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
🌟 கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான
-----------------------------------------------------------------------
விதிகள்..!!
-----------------------------------------------------------------------
1. உன்னை நேசி...
2. எப்போதும் கற்றுக்கொள்...
3. நேர்மையாக இரு...
4. யாரையும் காயப்படுத்தாதே...
5. எதிர்கால பயம் வேண்டாம்...
-----------------------------------------------------------------------
முடிந்தால் கண்டுபிடியுங்கள்...!!
-----------------------------------------------------------------------
⭐ 1 - வியட்நாம்
⭐ 2 - பனாமா
⭐ 3 - புருண்டி
⭐ 4 - நியூசிலாந்து
⭐ 5 - சீன குடியரசு
ஆறாவது நாடு என்னவாக இருக்கும்?
விடை :
⭐ ஆஸ்திரேலியா. இந்த எண்கள் நாட்டின் கொடியில் உள்ள நட்சத்திரங்களை குறிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக