Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூன், 2020

கலக்கலான கடி ஜோக்ஸ்... முடிவு... படித்ததில் பிடித்தது - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------
சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!
-------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர் நான் தூங்கும்போது நிறைய கனவு வருது... ஆனா எதுவுமே தெளிவா தெரிய மாட்டிங்குது...
டாக்டர் : தூங்கும்போது கண்ணாடி போட்டுக்கிட்டு தூங்குங்க... நல்லா தெரியும்...
நோயாளி : 😏😏
-------------------------------------------------------------------
நீதிபதி : பீரோவுல சாவி மாட்டி இருந்தும் ஏன் பீரோவ ஒடச்சு திருடுன...
திருடன் : தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கே எஜமான்...
நீதிபதி : 😳😳
-------------------------------------------------------------------
மகேஷ் : குண்டா இருக்குறவங்களுக்கு பிடிச்ச பூ எது தெரியுமா?
ரமேஷ் : தெரியலையே...
மகேஷ் : குண்டுமல்லி...
ரமேஷ் : 😆😆
-------------------------------------------------------------------
           இன்றைய கடி...!!
-------------------------------------------------------------------
ஒரு எறும்பை உரவ பண்ணா என்ன ஆகும்?
.
.
.
கட்டெறும்பாகிரும்.😌😌

ஒரு பறவையால எழுத முடியும்... அது என்ன பறவை?
.
.
.
பெண்குயின்...😬😬
-------------------------------------------------------------------
முடிவு படித்ததில் பிடித்தது
-------------------------------------------------------------------
முடிவில்லா முடிவை நோக்கி 
ஒரு முடிவோடு முடியும் என்று நினைத்து முன்னேறி பார்...
உன்னால் முடியாதது என்று எதுவும் இருக்காது.😀😀

-------------------------------------------------------------------
           விடுகதைகள்...!! 
-------------------------------------------------------------------
1. ஓடுவான், வருவான்; ஒற்றைக் காலில் நிற்பான். அவன் யார்?

2. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன?

3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?

4. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவான். அவன் யார்?

5. ஊர் முழுவதும் சுற்றுவான். வீட்டுக்குள் நுழைய மாட்டான். அவன் யார்?

6. மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது. அது என்ன?

விடைகள் : 

1. கதவு.
2. வெண்டைக்காய்.
3. தேங்காய்.
4. நெருப்பு.
5. செருப்பு.
6. எலுமிச்சை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக