Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூன், 2020

குறைந்த கட்டணத்தில் பார்சல் சேவை; இந்தியன் ரயில்வேயின் புதிய முயற்சி...

நாடுமுழுவதும் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்திலும் கூட பயணிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க இந்திய ரயில்வே முயற்சித்து வருகிறது.

முழு அடைப்பால் மக்களுக்கு தேவையான பொருட்கள் ஒரு குறிப்பிடத்தில் சிக்கி இருக்க, இந்த பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இறங்கிய ரயில்வே முன்னதாக சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கியது. இந்நிலையில் தற்போது , ​​வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் கொண்டு, முன்பதிவு செய்த பார்சல்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே அனுப்பத் தொடங்கியுள்ளது. தற்போது, ​​இந்த வசதி மத்திய ரயில்வேயில் ஒரு பைலட் திட்டமாக இயக்கப்படுகிறது. வரும் காலத்தில் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறையிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரயில்வேயின் பார்சல் துறையிலிருந்து பார்சலை மக்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியை தபால் துறை செய்யும். தனி நபர் அல்லது எந்தவொரு நிறுவனமும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதிக்கு பெயரளவு கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

மும்பை, புனே மற்றும் நாக்பூருக்கான கடைசி மைல் இணைப்பு வசதியை மத்திய ரயில்வே தற்போது தொடங்கியுள்ளது. இந்த வசதி குறித்த கூடுதல் தகவலுக்கு, தொலைபேசி எண் 9324656108-ஐ பொதுமக்கள் அழைக்கலாம். இது தவிர, adpsmailmah@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டும் பயணிகள் தகவல்களை பெறலாம்.

ரயில்வேயின் இந்த புதிய திட்டத்தின் கீழ், நீங்கள் பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியாக உங்கள் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பலாம். இதற்காக, நீங்கள் ரயில் நிலையங்களில் உள்ள பார்சல் துறைக்குச் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சாதாரண சரக்கு ரயில்களை விட மிக வேகமாக இயக்கப்படுகிறது. 

முழு அடைப்பின் போது ​​பார்சல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இந்த பார்சல் சிறப்பு ரயில்கள் மூலம் மிக விரைவில் நாடெங்கிலும் இடம்மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக