செவ்வாய், 17 டிசம்பர், 2019

காத்துக்கொண்டிருந்த புழு... எதற்காக? படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!சிரிக்கலாம் வாங்க...!!

பாபு : ஒரு ரூம்ல ஒரு பூனை இருக்கு.
ரைட் கார்னர்ல ஒரு எலி.
லெப்ட் கார்னர்ல ஒரு கப் பால்..
பூனையோட கண் எதுல இருக்கும்?
அருண் : தெரியலையே...
பாபு : பூனையோட கண் அதோட முகத்துலயேதான் இருக்கும்.
அருண் : 😁😁
-------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தர்றேன், அடுத்தது இரண்டு கோழி தர்றேன். இப்ப உங்கிட்ட எத்தனை கோழி இருக்கும்?
மாணவன் : 5 இருக்கும் சார்.
ஆசிரியர் : நல்லா கேளு... முதல்ல இரண்டு கோழி தர்றேன், அடுத்தது இரண்டு கோழி தர்றேன்.. இப்ப உங்கிட்ட எத்தனை கோழி இருக்கும்?
மாணவன் : 5 இருக்கும் சார்...
ஆசிரியர் : பெருமூச்சு விட்டவர் உஷ்... முடியலடா, சரி இதுக்கு பதில் சொல்லு
முதல்ல, நான் முதல்ல இரண்டு ஆப்பிள் தர்றேன், அடுத்தது இரண்டு
தர்றேன். இப்ப உங்கிட்ட எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன் : 4 சார்.
ஆசிரியர் : சரி... இப்ப நாம கோழிக்கு வருவோம்,
நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தர்றேன்,
அடுத்தது இரண்டு கோழி தர்றேன்.
இப்ப உங்கிட்ட எத்தனை கோழி இருக்கும்?
மாணவன் : 5 சார்.
ஆசிரியர் : அடே லூசுபயலே... எப்படிடா 5 கோழி வரும்?
மாணவன் : என்கிட்ட ஏற்கனவே வீட்டுல ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர் : 😡😡
-------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு...?

ஒருத்தன் பைக்ல போகும்போது, ஒரு கிளி மேல மோதிட்டான்,
கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துவிட்டது...!!
அந்தப் பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து,
ஒரு கூண்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்...!!
முழிச்சுப்பாத்த கிளி நெனச்சுதாம்...
'அய்யய்யோ... நாம மோதுனதுல பையன் செத்துட்டான் போல... அதான் நம்மல புடிச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க"
அப்படின்னு...!!
-------------------------------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது..!!!
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது,
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்.
மீனுக்கு புழு சிக்கியது,
மனிதனுக்கு மீன் சிக்கியது.
ஆனால், புழுவிற்கு........?
ஆனாலும் காத்திருந்தது புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை.
யாரும் யாரை விடவும் உயர்ந்தவரும் இல்லை,
தாழ்ந்தவரும் இல்லை.
முள் குத்தினால் கத்தும் நாம்,
டாக்டர் ஊசி போடும்போது மட்டும் தாங்கிக் கொள்வோம்,
வலி என்னவோ ஒன்றுதான்.
அதை ஏற்றுக்கொள்ள துணிந்து விட்டால்
வலியும், வேதனையும் தூசிதான்....!!
-------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

பொருள் :

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்