>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 17 டிசம்பர், 2019

    4 ல் பிறந்தவர்களின் ரகசியம்

     Image result for 4 ல் பிறந்தவர்களின் ரகசியம்
    பிறந்த எண்களிலுள்ள சில ரகசியம் (4, 13, 22, 31)-ல் பிறந்தவர்களின் ரகசியம்


    நல்ல ஒழுக்கமும், பழக்கமும் சிலருக்கு பிறப்பிலேயே இருக்கும். அதனை தங்களின் பிறந்த எண்களை வைத்து அறிந்து கொள்ள முடியும். 4, 13, 22, 31-ம் தேதிகளில் பிறந்தவர்கள் 4 எண்ணிற்குரியவர்கள். இவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 4-ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்களின் குண அமைப்பை இங்கு பார்ப்போம்.

    குண அமைப்பு :

    நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும்.

     பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையோ பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

     ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். புகழிலோ, பொருளிலோ அதிகம் ஆசை இருக்காது.

     எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொதுநல காரியங்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.

    அதிர்ஷ்ட கல் :

     நான்காம் எண்ணிற்குரியவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். இந்த கல்லை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழிலில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும்.

    பரிகாரங்கள் :

     ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் எதுவும் நன்மையாகவே அமையும்.

    அதிர்ஷ்டம் தருபவை :

     அதிர்ஷ்ட தேதி, - 1, 10, 19, 28

     அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

     அதிர்ஷ்ட திசை - கிழக்கு

     அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு

     அதிர்ஷ்ட கல் - கோமேதகம்

     அதிர்ஷ்ட தெய்வம் - துர்க்கை

    4-ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்களின் குணமறிந்து செயல்பட்டால் எதுவும் நன்மையாகவே அமையும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக