>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 30 ஜனவரி, 2020

    மகிழ்ச்சியாக வாழ இப்படி செய்தால் போதுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!!

    ராம் : என்ன டாக்டர்? இந்த நடுராத்திரியில கிளினிக்கை திறந்து வெச்சிக்கிட்டு இருக்கீங்க?
    டாக்டர் : தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.
    ராம் : 😳😳
    ----------------------------------------------------------------------------------------------------------
    மாணிக்கம் : என்னங்க... பொண்ண கண்ணுலையே காட்ட மாட்டேங்கிறாங்க...?
    தீபக் : நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு.
    மாணிக்கம் : 😬😬
    ----------------------------------------------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    தனியாய் நீ படுகின்ற பாடுகளும்,
    தனிமையில் நீ வடிக்கின்ற கண்ணீரும்...
    ஒரு நாளும் வீணாகாது...
    நீ படுகின்ற துயரங்களை ஒரு வேளை மற்றவர்கள் அறியாமல் போகலாம்.
    உன் பாடுகளுக்கு பலன் கிடைக்கும்போது உலகமே உன்னை கண்டு வியக்கும்...
    ஒரு போதும் சோர்ந்து போகாதே...
    மன உறுதியை இழந்து விடாதே...
    ----------------------------------------------------------------------------------------------------------

    விடுகதைகள்...!!
    1. அடிப் பாதை இருக்கும். கால் இருக்காது. அது என்ன?

    2. இளமையில் உயரம், முதுமையில் கட்டை. அது என்ன?

    3. மாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்?

    4. உலகம் முழுவதும் சுற்றும். ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும். அது என்ன?

    விடைகள் :

    1. நத்தை.

    2. மெழுகுவர்த்தி.

    3. படிகள் இருக்காது.

    4. முத்திரை.
    ----------------------------------------------------------------------------------------------------------

    மகிழ்ச்சியாக வாழ...!!
    சாந்தமாக பேசுங்கள்...

    சுவையாக சாப்பிடுங்கள்...

    போதுமான நேரம் உறங்குங்கள்...

    பொறுமையாக பணி செய்யுங்கள்...

    உண்மையாக இருங்கள்...

    எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்...

    சரியாக திட்டமிடுங்கள்...

    நேர்மையாக சம்பாதியுங்கள்...

    தொடர்ந்து சேமியுங்கள்...

    நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...

    எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக