>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 18 மார்ச், 2020

    நேரமும்... வாய்ப்பும்... நினைப்பதை யார் அடைகிறார்கள்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    இது சிரிப்பதற்கான நேரம்...!!

    ஆசிரியர் : நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
    ரமேஷ் : உங்கள சந்தோஷப் படுத்தனும்னுதான் பிட்டு வெச்சு எழுதினேன் சார்!
    ஆசிரியர் : 😠😠
    ------------------------------------------------------------------------------------------------
    ராம் : டாக்டர் நான் 100 வயசு வரைக்கும் வாழணும்..
    டாக்டர் : சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ!
    ராம் : கல்யாணம் பண்ணா 100 வயசு வாழ முடியுமா டாக்டர்?
    டாக்டர் : இல்ல.. 100 வயசு வாழணும்ங்கற ஆசை போயிடும்.
    ராம் : 😳😳
    ------------------------------------------------------------------------------------------------
    ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
    மாணவன் : கொசுவே இல்லாத காலம் சார்..!
    ஆசிரியர் : 😩😩
    ------------------------------------------------------------------------------------------------
    வாழ்வதே சிறப்பு...!!
    மனிதன் சிறப்பாக வாழ வேண்டும் என்று எண்ண வேண்டுமே தவிர,
    வாழ்ந்து என்ன பயன்? என்று சலித்துக் கொள்ளக்கூடாது...
    வாழ்தல் என்றால் உண்டும், உடுத்தும், மகிழ்ந்தும் வாழ்வதல்ல...
    இளமை நிலையற்றது என்பதை உணர்ந்து, நிலையான
    நற்செயல்களை செய்து பிறர் உள்ளத்தில் வாழ்வதே சிறப்பு...
    ------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
    பெருமையிற் பீடுடைய தில்.

    விளக்கம் :

    உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
    ------------------------------------------------------------------------------------------------
    நேரமும்... வாய்ப்பும்...!!
    நேரமும்... வாய்ப்பும் எல்லோருக்கும்
    எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன...
    முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே
    தாங்கள் நினைப்பதை அடைகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக