Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 மார்ச், 2020

அன்புள்ள Moto! அவனவன் 6 கேமரா கேட்குறான்; இந்த நேரத்துல இது தேவையா?


Moto E6s Launched
Motorola நிறுவனம் அதன் E series-ன் கீழ் Moto E6s எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை பற்றிய விவரங்கள் இதோ.

லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டோரோலா, அதன் மோட்டோ இ தொடரின் கீழ் புதிய Moto E6s எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பீகாக் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ரெட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. மோட்டோரோலா நிறுவனம் இதுவரை இந்த ஸ்மார்ட்போனின விலையை வெளியிடவில்லை, ஆனால் இது வரும் வாரங்களில் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் வாங்க கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மோட்டோ E6s ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

மோட்டோ E6s ஆனது 2 ஜிஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரையிலான மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.

இதில் ட்ரிபிள் கார்டு ஸ்லாட் உள்ளது, அதாவது பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் 720x1560 பிக்சல் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் கொண்ட 6.1 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயக்க முறைமையின் கீழ் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ E6s ஆனது எல்இடி ஃபிளாஷ் மற்றும் எஃப் / 2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 எம்பி பிரதான சென்சார் + 2 எம்பி செகண்டரி கேமரா (எஃப் / 2.4) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்காக முன்பக்கத்தில் ஒரு 5MP கேமரா உள்ளது.


இந்த ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது மற்றும் 5W சார்ஜிங் கொண்ட 3000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. அளவீட்டில் 155.6 x 73.0 x 8.5 மிமீ உள்ள இந்த ஸ்மார்ட்போன் பி2ஐ பூச்சுடன் வருகிறது, இது ஓரளவிலான தண்ணீரை எதிர்க்கும்.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, மோட்டோ E6s ஆனது 4ஜி, வோல்டிஇ, 3 ஜி, வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

சமீபத்தில், மோட்டோரோலா தனது மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போனான மோட்டோ ரேஸரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.1,24,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 2 முதல் நாட்டில் விற்பனைக்கு வரும்.

நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ரேஸர், ஏற்கனவே பிளிப்கார்ட்டில் ப்ரீ-ஆர்ட்ர் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக