Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 மார்ச், 2020

சிம்ம ராசி சார்வரி வருடம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் பாகம் 12


Image result for சார்வரி வருடம்


திலும் நேர்மையுடனும், வேகத்துடனும் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு செயல்பாடுகள் மேற்கொண்டாலும் அதில் வேகத்துடனும், துரிதத்துடனும் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழலும், தனவரவும் மேம்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாக கிடைக்கும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான கடனுதவிகள் கிடைக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்களும், சில விரயங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்த செயல்கள் யாவும் கைகூடும். நண்பர்களிடத்தில் நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் சில காலதாமதத்திற்கு பின்பே கிடைக்கும். கணிதம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு :

பெண்கள் தங்கள் மனதில் எண்ணிய எண்ணங்களை நிதானத்துடன் வெளிப்படுத்துவதன் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் உடல் சோர்வும், அலைச்சலும் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புத்திரர்களிடத்தில் சற்று கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சுயதொழில் புரிபவர்களுக்கு தொழில் அபிவிருத்திக்கான கடன் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வும், சிலருக்கு இடமாற்றமும் சாதகமாக அமையும். திட்டமிட்ட பணிகளில் நிதானத்துடனும், அதேசமயம் செய்யும் செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விஷயங்கள் மற்றும் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்க்கவும். குடும்ப விஷயங்களை உடனிருப்பவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு மேம்படும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாகவே கிடைக்கும். பணியாட்களின் ஆலோசனைகளை கேட்கும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டாலும் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் மற்றும் விரயங்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் தேவையற்ற கோபத்தை விடுத்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் மூலம் புதிய அறிமுகமும், அனுபவங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஆதரவுகள் சில போராட்டங்களுக்கு பின்பே கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்போது தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிப்பது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான கடனுதவிகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். கட்சி தொடர்பான வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு :

விவசாயத்தில் எதிர்பார்த்திருந்த விளைச்சல் ஏற்படும். முயற்சிக்கேற்ப வங்கி தொடர்பான கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பயிர்களில் புதிய ரக உரங்களைப் பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று பயன்படுத்தவும். எதிர்பாலின மக்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படுவதன் மூலம் நன்மதிப்பு ஏற்படும். அக்கம்பக்கம் மனை உரிமையாளர்களின் ஆதரவுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் லாபங்கள் மேன்மை அடையும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுடன் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும். திட்டமிட்ட பணிகளில் வேகம் இருந்தாலும், அவ்வப்போது சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமைந்தாலும் அதற்கான அங்கீகாரம் காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம் :

செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபட்டு வர உடல் ஆரோக்கியமும், தொழில் சார்ந்த துறையில் முன்னேற்றமும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக