சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
பாண்டி : இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோசியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்ட?
அருண் : சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா?
பாண்டி : 😂😂
---------------------------------------------------------------------------------------------------------
பாபு : அமைச்சருக்கு வேண்டியவரா இருக்கலாம். அதுக்காக இப்படியா?
தீபக் : ஏன், என்னாச்சி?
பாபு : கள்ள நோட்டடிக்க லோன் கேக்குறாரு...
தீபக் : 😳😳
---------------------------------------------------------------------------------------------------------
காதலன் : நேத்து எங்கப்பாவும், அம்மாவும் சண்டை போடறப்போ நம்ம காதலைச் சொன்னது நல்லதா போச்சு...
காதலி : ஏன், என்ன சொன்னாங்க?
காதலன் : எங்கேயாவது ஓடித் தொலைன்னு சொல்லிட்டாங்களே!
காதலி : 😝😝
---------------------------------------------------------------------------------------------------------
ராமு : என் அம்மாவும், என் மனைவியும் சிரிச்சு பேசிக்கிட்டிருந்தாங்க!
சோமு : அப்படியா? ஆச்சரியமா இருக்கே...!
ராமு : என் அம்மா எதிர் வீட்டுக்காரிக்கிட்டையும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிக்கிட்டையும் பேசிக்கிட்டிருந்தாங்க...!
சோமு : 😛😛
---------------------------------------------------------------------------------------------------------
ஹா.. ஹா... இது எப்படி இருக்கு?
கடவுளிடம் மனிதன் கேட்டான்...
பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க...
ஆனா பொண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க?
கடவுள் சொன்னார்,
'நான் பொண்ணுங்களை மட்டும் தான் படைத்தேன்."
அவங்களைக் கட்டிக்கிட்டுப் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டது நீங்கதான். ---------------------------------------------------------------------------------------------------------
மிகப்பெரிய வரம்...!
நாம் தவறிடும்போது தாங்கிடும் கரங்கள்...
மனம் வருந்திடும்போது விருந்திடும்(ஆறுதல் சொல்லும்) இதயம்...
நம்மை ஒதுக்கிடும்போது விரும்பிடும் கண்கள்...
கிடைத்தால் நம் வாழ்க்கை மிகப்பெரிய வரம்...
இது உண்மையா?
ஏன் வாழ்கிறோம்? என்ற கேள்விக்கு
நம்மிடத்தில் அர்த்தம் கொடுக்க முடியவில்லை என்றாலும்,
இன்னும் ஏன் வாழ்கிறாய்? என்ற கேள்வியை
மற்றவர் கேட்கும் அளவிற்கு நம் நடத்தை இருந்துவிடக்கூடாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக