Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 17 ஜூன், 2020

ஒரே எழுத்து இரண்டு இடத்திலும் வரும்... கண்டுபிடியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------
              சிரிக்கலாம் வாங்க...!!
--------------------------------------------------- மாணவன் : பரீட்சையில் குயடை ஆனதுக்கு என் மறதி தான் சார் காரணம்...
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே....
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது.
ஆசிரியர் : 😠😠
---------------------------------------------------
கணவன் : ஏன் நான் உள்ள வந்ததும் கண்ணாடிய எடுத்து போட்டுக்கிட்ட?
மனைவி : டாக்டர் தான் தலைவலி வந்ததும் கண்ணாடியை போட்டுக்க சொன்னாரு.
கணவன் : 😂😂
---------------------------------------------------
வாடிக்கையாளர் : சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினை புடிக்கணும்!
கடைக்காரர் : சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்கு பெரிய பை எங்க கடையில இல்லையே!
வாடிக்கையாளர் : 😝😝
---------------------------------------------------
பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகை பார்க்கலாம்.
பாலு : 😬😬
---------------------------------------------------
    ஒரே எழுத்து இரண்டு இடத்திலும்       வரும்... கண்டுபிடியுங்கள்...!!
---------------------------------------------------
1. _ந்_ம்

2. ந_மாட்_ம்

3. _ளங்_ம்

4. ச_பள_

5. _டிபு_
---------------------------------------------------
                      பதில்கள் :
---------------------------------------------------
1. தந்தம்

2. நடமாட்டம்

3. களங்கம்

4. சம்பளம்

5. குடிபுகு
---------------------------------------------------
           சிந்தனை துளிகள்..!
---------------------------------------------------
1. அச்சம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது...

2. பிறரை ஏமாற்றமாட்டேன் என்ற உறுதி வந்தால் மனிதன் உயர்ந்துவிடுவான்...

3. பணத்தை தியாகம் செய். கொள்கைகளை தியாகம் செய்யாதே...

4. செல்வத்திற்கும், புகழுக்கும் அறிவுதான் வேர்...

5. பூமியையும், பிரபஞ்சத்தையும் விட அபாரமான சக்தி பெற்றது உனது மூளை...
---------------------------------------------------
       குறளும்... பொருளும்...!!
---------------------------------------------------
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
---------------------------------------------------
                     விளக்கம் :
---------------------------------------------------
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகின்றவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக