Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 17 ஜூன், 2020

இந்தியா தான் வேண்டும்.. கிரேட் வால் மோட்டார்ஸ் ரூ.7,600 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்..!

சமீப காலமாக சீனா இந்தியா இடையே சற்று பதற்றமான நிலையே இருந்து வருகிறது. இதனை இன்னும் அதிகரிக்கும் விதமான சீன இந்திய எல்லையில் சற்று பதற்றமான நிலையே நீடித்து வருகிறது.

இந்த எல்லை பிரச்சனையானது பல காலமாக நீடித்து வந்தாலும், வர்த்தக உறவினை பொறுத்த வரையில் சற்று சுமூகமாகத் தான் போயிக் கொண்டிருக்கிறது.

எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

சீன நிறுவனங்கள் முதலீடு

கொரோனாவின் பிடியில் உலக நாடுகள் சிக்கியுள்ள நிலையில், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சீனா நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவித்து வந்தன. இது இந்தியாவிலும் முதலீடுகளை சீனா வாரி இறைத்து வந்தது. இதனால் இனி சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் போது, அதனை இந்திய அரசின் அனுமதி பெற்றுத் தான் அனுமதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.


இந்தியாவில் கிரேட் வால் மோட்டார்ஸ் முதலீடு

இதற்கிடையில் தற்போது சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் கம்பெனி லிமிடெட், மகாராஷ்டிராவில் 1 பில்லியன் டாலர் அல்லது சுமார் 7,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

இந்த சீன நிறுவனம் கடந்த ஜனவரி மாதமே புனேவுக்கு அருகிலுள்ள கார் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம் தலேகான் உற்பத்தி பிரிவை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்குவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட உள்ள இந்த ஆலையில் நவீன உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் இருக்கும். இதன் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒரு விழாவில் கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிஎம்டபள்யூ நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் யாங்க், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்க்கர் ஷி மற்றும் மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியாவின் சீனத் தூதர் சன் வீடோங் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

என்ன பயன்

இந்த முதலீடு உலகம் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கும், வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கும், விநியோக சங்கிலியை கட்டுவதற்கும் உதவும் என்றும் ஷி தெரிவித்துள்ளார். ஜிஎம்மின் 300 ஏக்கர் தலேகான் ஆலையை கையகப்படுத்துவது சீன நிறுவனத்திற்கு பல நன்மைகளை கொடுக்கும். இது விநியோக சங்கிலியை மேம்படுத்த முடியும். அதோடு திறமையான மனித வளம் மற்றும் உள்கட்டமைப்பு கிடைப்பது, மும்பை துறைமுகத்திற்கு அருகாமையில் கிடைப்பது, அதிவேக நெடுஞ்சாலை போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக