சமீபத்தில் ஒரு வியாபாரி, தன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.
யார் அவர்
கெளரவ் பன்சால், வயது 40, கிழக்கு டெல்லி ஐபி விரிவாக்கப் பகுதியில் வசித்து வந்தார். வியாபாரம் தான் தொழில். கெளரவ் பன்சாலின் வியாபாரம் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே பெருத்த நஷ்டம். போதாக்குறைக்கு கொரோனா லாக் டவுன் என்பதால் வியாபாரம் நடந்திருபப்தே சிரமம் தானே. அதன் பிறகு தான லாபம் எல்லாம்.
அதிக கடன்
அதோடு பல வட்டிக் கடைக்காரர்களிடம் இருந்து, அதிக வட்டிக்கு பயங்கரமாக கடனும் வாங்கி இருந்தாராம். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம். கெளரவ் பன்சாலின் மனைவி ஒரு எல் ஐ சி ஏஜெண்ட். எனவே கெளரவ் பன்சால் கூட எல் ஐ சி பாலிசிகளை எல்லாம் விற்று இருக்கிறாராம்.
குடும்பத்துக்கு பணம்
வியாபாரம் எதிர்பார்த்தது போல் போகவில்லை, நிறைய கடன் என பல பிரச்சனைகள். ஆனால் அவர் பெயரில் ஏதோ லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி இருந்து இருக்கிறதாம். இந்த பாலிசியில் இருந்து வரும் 1 கோடி ரூபாய் பணம் தன் குடும்பத்துக்கு போய்ச் சேரும் எனத் தெரிந்து வைத்திருக்கிறார்.
மரண பயம்
தான் இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வழி தேடி இருக்கிறார். தற்கொலை செய்து கொள்ள தைரியம் வரவில்லை. எனவே நான்கு பேரை தயார் செய்து தன்னைத் தானே கொல்லச் சொல்லி இருக்கிறார் கெளரவ் பன்சால். தன்னைக் கொல்வதற்காக, அந்த நான்கு பேருக்கு 90,000 ரூபாய் பணமும் கொடுத்து இருக்கிறாராம்.
கொலை
அந்த நான்கு பேரும் டெல்லியில் மோகன் கார்டன் பகுதியில், கெளரவ் பன்சாலை கொலை செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். ஜூன் 09-ம் தேதி, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கெளரவ் பன்சாலின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். காவலர்களும் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
டெல்லி புறகநகர் பகுதி
அடுத்த நாள் ஜூன் 10-ம் தேதி தான், கெளரவ் பன்சாலின் உடல், டெல்லி புற நகர் பகுதியில் கிடைத்தது. கெளரவ் பன்சால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தான் கருதினார்கள். சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்த போது தான், கெளரவ் பன்சால் தன்னைக் கொல்ல தானே ஆட்களைத் தயார் செய்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக