இந்த நிறுவனம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் 2.33 சதவீத பங்கினை, 1.5 பில்லியன் டாலர் மூலம் கையகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பார்ப்பு என்ன?
சமீபத்திய நாட்களில் அதிகரித்து வரும் முதலீடுகள் மூலம், ஜியோ இன்போகாம், தொலைத் தொடர்பு துறையை, ஸ்ட்ரீமிங்க், கேமிங் மற்றும் இணையவழி அம்சங்களை அதன் பயன்பாட்டில் இணைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகத் தான் அதிரடியான பல முதலீடுகளை திரட்டி வருகின்றது.
அடுத்தடுத்த முதலீடு
அபுதாபியின் முபதாலா மற்றும் ADIA நிறுவனம் முறையே 1.2 பில்லியன் டாலர் மற்றும் 750 மில்லியன் டாலர்களை முதலீடுகளை செய்துள்ளதன் மூலம், ஜியோ நிறுவனத்தின் கணிசமான அளவு பங்கினை வாங்கியுள்ளன. இவர்கள் மட்டும் அல்ல கடந்த இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளன.
நிறுவனத்தினை விரிவுபடுத்தல்
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சமீப காலமாக தனது வர்த்தகங்களை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதும், சில துறைகளை விட்டு, சில துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதையும் கவனிக்க முடிகிறது. குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தினை பொறுத்த மட்டும், வரும் காலத்தில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை இருக்கலாம். இதனால் எண்ணெய் பயன்பாடு குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தனது வர்த்தகத்தினை டிஜிட்டல் மயமாக்கி வருவதனையும் காண முடிகிறது.
யார் யார் முதலீடு
ஆக மேற்கண்ட நிறுவனங்களை தவிர பேஸ்புக் நிறுவனம் மற்றும் கேகேஆர், சில்வர் லேக் கேப்பிட்டல், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு , ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜியோவில் முதலீடுகளை செய்ய உள்ளதாகவும் முன்பு கூறப்படுகிறது.
இவர்கள் தவிர டிபிஜி நிறுவனமும் L catterton நிறுவனமும் இணைந்து 0.93 சதவீத பங்குகளை முதலீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் 4546.80 கோடி ரூபாயும் மற்றும் 1894.50 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.
யார் எவ்வளவு முதலீடு
கடந்த ஏப்ரல் 22 அன்று 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்த Facebook நிறுவனம், அதன் மூலம் 9.99% பங்குகளை வாங்கியது.
இதே மே 4 அன்று ரூ.5,665.75 கோடி முதலீடு செய்த Silver Lake நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது.
மே 8 அன்று ரூ.11,367 கோடி முதலீடு செய்து, விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது.
மே 17 அன்று ரூ.6,598.38 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34% பங்குகளை வாங்கியது.
மே 22 அன்று ரூ.11,367 கோடி முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.
ஜூன் 5ல் ரூ.9,093.60 கோடி முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85% பங்குகளை வாங்கியது..
இதே ஜூன் 5 அன்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ரூ.4,546 கோடி முதலீடு செய்து கூடுதலாக 0.93% பங்குகளை வாங்கியது.
ஜுன் 8 அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ, ரூ. 5,863.50 கோடி முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது.
ஜூன் 13: டிபிஜி நிறுவனம் ரூ.4,546.80 கோடி முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது.
L catterton நிறுவனம் 10வது முறையாக 0.39 சதவீத பங்குகள் மூலம் 1894.50 கோடி ரூபாய் முதலீடினை செய்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக