சிரிக்கலாம் வாங்க...!!
பிரவீன் : பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு வாழுறது கஷ்டமில்லை...
அருண் : வேற என்ன கஷ்டம்?
பிரவீன் : பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு, பயப்படாத மாதிரியே நடிக்கிறதுதான்டா ரொம்ப கஷ்டமா இருக்கு...
அருண் : 😂😂
---------------------------------------------------------------------------------------------
கணவன் : ஏன்டி ஒரு மாதிரியா இருக்க?
மனைவி : அத உங்கக்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது?
கணவன் : சரிவிடு...
மனைவி : அதானே... நான் எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்ல...
கணவன் : அப்போ என்ன விஷயம்னு சொல்லேன்டி...
மனைவி : உங்கக்கிட்ட சொல்றதுக்கு பதிலா சொல்லாமலேயே இருக்கலாம்.
கணவன் : சொல்லாட்டி போடி...
மனைவி : அது சரி... என்ன பத்திதான் உங்களுக்கு கவலையே இல்லையே...
கணவன் : 😡😡
---------------------------------------------------------------------------------------------
இதில் நீங்கள் யார்?
தவறாக இருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருந்தால் நீ புத்திசாலி...
அதுவே சரியாக இருந்தாலும் வாயை மூடிக்கொண்டிருந்தால் நீ புருஷன்...
---------------------------------------------------------------------------------------------
வெற்றியின் ரகசியங்கள்...!!
வேண்டுவதற்கு முன் - நம்புங்கள்...
பேசுவதற்கு முன் - கேளுங்கள்...
செலவழிக்கும் முன் - சம்பாதியுங்கள்...
கைவிடுவதற்கு முன் - முயற்சியுங்கள்...
எழுதுவதற்கு முன் - சிந்தியுங்கள்...
இறப்பதற்கு முன் - வாழுங்கள்...
---------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
அடுத்தவரின் எண்ணங்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள்...
ஏனெனில் ஒரு முட்டாளிற்கு ஒரு புத்திசாலி பைத்தியக்காரனைப் போலவே தோன்றும்...
உன்னுடைய முதல் வெற்றி எது தெரியுமா?
உன்னை நீ ரசிப்பது...
உன்னை நீ மதிப்பது...
உன்மீது நீ நம்பிக்கை கொள்வது...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக