திங்கள், 15 ஜூன், 2020

ஆப்ரேஷன் செய்ததால் டாக்டருக்கு கிடைத்த வெகுமதி.. வயிறு குலுங்க சிரிங்க... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------
             சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------------------
மகேஷ் : நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை ஆயிட்டானே எப்படி?.
சுரேஷ் : வேற ஒன்னுமில்லை. அவனுக்கு போன மாசம்தான் கல்யாணம் பண்ணி வெச்சேன். அதிலிருந்து இப்படி ஆயிட்டான்.
மகேஷ் : 😅
-------------------------------------------------------------------
ஹா... ஹா... இது எப்படி இருக்கு?
-------------------------------------------------------------------
ஒரு இளைஞன், சாலையில் அழகான பெண்ணை பார்த்தபடி நடந்து போய் கொண்டிருந்தான். அதனால் சாலையில் படுத்துக் கிடந்த கழுதை மீது தவறி அதன் காலுக்கு கீழே போய் விழுந்தான் இளைஞன்.

இதை பார்த்த அந்த பெண் இளைஞனை நெருங்கி, என்ன தம்பி உங்க அண்ணன்கிட்ட ஆசீர்வாதம் வாங்குறியா? என்று கேட்டாள். அதைக் கேட்ட அவன் சொன்னான்... ஆமா, அண்ணி...!!😂😂
-------------------------------------------------------------------
      வயிறு குலுங்க சிரிங்க...!!
-------------------------------------------------------------------
பாபு டாக்டரைத் தேடி வந்தார். அவரை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார். சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?

எனக்கு வயிறு வலிக்குது டாக்டர் என்றார் பாபு. நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீங்க பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்காரு. நீங்க அங்க போயிதான் பார்க்கணும்.

அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலி-ன்னு கேளுங்க டாக்டர். சரி எதனால வலி? என்றார். நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன் டாக்டர்.

ஓ... அப்படீன்னா நீங்க இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படுங்க! என்று உள்ளே அழைத்துச் சென்று, அவருக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்.

அவருடைய வழியிலேயே சென்று அவரை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார்.

தூங்கி எழுந்ததும், டாக்டர் பாபுவின் அருகில் சென்று சொன்னார். அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.

நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்? நீங்க நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தீங்க.. அதை ஆப்ரேஷன் செஞ்சு வெளியே எடுத்துட்டேன்.

நல்ல வேளை, உடனடியா நீங்க என்கிட்ட வந்ததால பிழைச்சுக்கிட்டீங்க... அந்த குதிரையும் பிழைச்சிருச்சு.

அப்படியா டாக்டர்?... அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா? வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பாருங்க. அவர் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனார்.

அங்கே குதிரையை பார்த்தார். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினார்.

டாக்டர் பெருமிதத்துடன் அவரைப் பார்த்தார். பளார் என்று டாக்டரை அறைந்தார் பாபு. எதிர்பாராமல் பாபு அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், எதுக்கு என்னை அடிச்சீங்க? என ஆவேசமாக கேட்டார்.

நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க! என்றார். டாக்டர் மயங்கி விழுந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்