திங்கள், 15 ஜூன், 2020

4-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சுக்கிரன் என்றால் இன்பம் என்று பொருள். அன்பு, பாசம் மற்றும் காதல் ஆகிய மூன்று இன்பங்களையும் அளிக்கக்கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகின்றவர் சுக்கிரன். இவர் கலை உணர்வால் இன்பம் உண்டாக்குவார். அழகு, ஆராதனையால் இன்பம் ஏற்படுத்துவார்.

நல்ல மனைவி, வீடு, வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து, சுக்கிர பகவானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து, வெண்தாமரையால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சுக்கிர தோஷங்கள் விலகும்.

லக்னத்திற்கு 4-ல் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு தாராள தன வரவு உண்டாகும்.

4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

👉 கல்வி ஞானம் கொண்டவர்கள்.

👉 சொத்துச்சேர்க்கை உடையவர்கள்.

👉 சுக வாழ்வு வாழக்கூடியவர்கள்.

👉 தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

👉 அழகான தோற்றம் உடையவர்கள்.

👉 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.

👉 உறவினர்களின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

👉 வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்