Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

மூவரின் ஆசை... ஆனால் ஒரே ஒரு வரம்...🤔 யோசியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
------------------------------------------
கணவன் : குழந்தை ஏன் அழறான்? டாக்டர் ஊசி போட்டாரா?
மனைவி : இல்லை... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே... இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கெட்-ஐ அவர் பிடுங்கித் தின்னுட்டாரு...
கணவன் : 😆😆
------------------------------------------
கதை படிக்கலாம் வாங்க...!!
------------------------------------------
ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாக குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கி கிடந்த பெரிய மீனொன்று அவனை பார்த்து கெஞ்சியது.

மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்த கரை பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.

மீனவன் அந்த மீனை தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்தி கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது? என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை.

எனவே, அவன் மீன்களின் ராஜாவே... நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது? என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்கு சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன் என்று கூறினான்.

மீனும், சரி என்று சம்மதித்து நன்றி கூறி சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததை கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது? என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை... மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டை குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேள்... என்றார்.

அடுத்ததாக அவனது அம்மா... மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள் என்றார்...

கடைசியாக மனைவி நமக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள் என்றாள்.

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

மீனவன் கேட்ட வரம்... என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்... என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக