
+92
என்ற எண்ணில் தொடங்கும் எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அதை எடுக்காமல் தவிர்க்க
வேண்டும் என இந்திய குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்புக்கான
உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மோசடி செய்பவர்களிடம்
இருந்து அழைப்புகள்
இந்த
அழைப்புகள் மோசடி செய்பவர்களிடம் இருந்து வரக்கூடும் எனவும் அவர்கள் தங்களது
பணத்தை மோசடி செய்துவிட்டு வெளியேறிவிடுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
+92 என்ற
எண்ணில் இருந்து அழைப்பு
இந்த அழைப்புகளானது +92 என்ற எண்ணில்
இருந்து வரக்கூடும் எனவும் அதில் தங்களது முக்கியமான தகவல்களை கேட்பது போது பேசி
அனைத்து தகவல்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10
அன்று வெளியீடு
இந்த தகவலானது MHA-ல் இருந்து ஆகஸ்ட்
10 அன்று வெளியிடப்பட்டது. +92 என்ற எண்ணில் இருந்து தொடங்கும் எனவும் இதில்
இருந்து குரலழைப்புகள் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்வார்கள் எனவும்
எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த குறியீடு பாகிஸ்தான் நாட்டின் குறியீடாகும்.
ஓடிபி எண்களை
வாங்கி மோசடி
இதில் இருந்து வரும் அழைப்புகள்
தங்களின் முக்கியமான தகவல்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். அதோடு இதன் மூலம்
தங்களின் ஓடிபி எண்களை வாங்கி வங்கியில் இருந்து பணத்தையோ அல்லது தங்களது ரகசிய
தகவல்களையோ வாங்கி ஏமாற்றிவிடுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்களை
கையாண்டு மோசடி
தங்களை நம்பவைப்பதற்கு அவர்கள்
பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு மோசடி செய்வார்கள். பல சந்தர்பங்களை நாம்
கடந்து வந்தது போல் கையாண்டு பேசி சந்தேகமே வராதபடி தங்களை ஏமாற்ற
முயற்சிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் போல் அழைப்பு
உதாரணமாக எடுத்துக் கொண்டால் வங்கி
அதிகாரிகள் போலவும், இலவச சேவை பிரதிநிதி போலவும், பரிசுத் தொகை வழங்குபவர்கள்
போல் பேசி தங்களை மோசடி வலையில் விழவைப்பார்கள் என்பது எனவே கவனமாக இருக்க
வேண்டும்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
மோசடி
தங்களை அறியாமல் ஒருமுறை தங்களின்
விவரங்களை பகிர்ந்துவிட்டால் அதை சரி செய்வதற்கு கூட நேரம் தரமாட்டார்கள் விரைவாக
செயல்பட்டு மோசடி செயலில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு போலி
கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள்
தங்களின் விவரத்தை அறிந்தபிறகு பணத்தை
நேரடியாக மற்றொரு போலி கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள் அல்லது வேறு நூதன நுட்பத்தை
கையாண்டு தங்களின் மொத்த பணத்தையும் கணக்கில் இருந்து சுத்தமாக துடைத்த
எடுத்துவிடுவார்கள்.
நூதனமுறையில்
கையாண்டு திருடப்படும்
இவர்கள் நூதனமுறையில் கையாண்டு திருடப்படும்
பணத்தை திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்றது எனவும் இந்த எண்ணில் இருந்து வரும்
அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய
பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மின்னஞ்சல்
மூலமாகவும் தொடர்பு கொள்ள வாய்ப்பு
இணைய பாதுகாப்பு உள்துறை
அமைச்சகத்தின் பரிந்துரைபடி +92 உடன் தொடங்கும் எண்களின் அழைப்புகளை எப்போதும்
தவிர்க்கவும் அதோடு அழைப்புகளோடு மோசடிக்காரர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் தங்களை
தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனத்தோடு
செயல்பட வேண்டியது அவசியம்
இத்தகைய தாக்குதல்களைத் தவிர்க்க,
நம்பகமான தளங்களை மட்டுமே பயன்படுத்தவும் எனவும் பதிலளிப்பதற்கு முன் அனுப்புநரின்
விவரங்களை சரிபார்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும்
இந்த காலக்கட்டத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக