Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

முகேஷ் அம்பானியின் அடுத்த டார்கெட்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..!

மில்க்பேஸ்கட்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி டெலிகாம் சேவையை அறிவிக்கும் போதும் டெலிகாம் நிறுவனங்கள் எந்த அளவிற்குப் பயந்து இருந்ததோ, தற்போது அதைவிடப் பல மடங்கு அதிகமாகப் பயத்தில் ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் உள்ளது.
முகேஷ் அம்பானி டெலிகாம் சேவையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் அதை அடித்தளமாக வைத்து இந்திய ரீடைல் சந்தையைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார். இதன் படி ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தைத் தற்போது முகேஷ் அம்பானி மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் சமானிய மக்களுக்கான அனைத்து விதமான சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஜியோ தளத்தை ஒன் ஸ்டாப் சொல்யூஷன் ஆக வடிவமைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து இணைய ஈகாமர்ஸ் சேவைகளும் தனது ஜியோ தளத்திற்குள் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ள முகேஷ் அம்பானி புதிதாக 2 நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2 புதிய நிறுவனம்
புதிய சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, ஏற்கனவே அத்துறையில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனத்தைக் கைப்பற்றி வர்த்தகத்தை விரிவாக்கம் வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது ஆன்லைன் பர்னிச்சர் விற்பனை பிராண்ட்-ஆன அர்பன் லேடர் மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் பால் விநியோகம் செய்யும் மில்க்பேஸ்கெட் நிறுவனத்தைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிரா முதல் மருந்து வரை
கடந்த 2 வாரங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸ், பெண்கள் உள்ளாடை விற்பனை நிறுவனமான Zivame, பல வாரங்களாகப் பேச்சுவார்த்தையில் இருக்கும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 2 நிறுவனத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
அர்பன் லேடர்
சில மாதங்களாக மிகவும் ரகசியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வந்து, ஆனால் தற்போது இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகும், ரிலையன்ஸ் இந்நிறுவனத்தைச் சுமார் 30 மில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 30 மில்லியன் டாலர் தொகையில் நிறுவன வர்த்தக வளர்ச்சிக்காகச் செய்யப்படும் கூடுதல் நிதியுதவியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மில்க்பேஸ்கட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு முன் மில்க்பேஸ்கட் தனது நிறுவனத்தை அமேசான் மற்றும் பிக்பேஸ்கட் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது ஆனால் கடைசிக்கட்டத்தில் அவை தோல்வி அடைந்தது. ஆனால் சமீபத்தில் 5 மில்லியன் டாலர் அளவிலான தொகை வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு செய்த நிலையில் இந்நிறுவனத்தைத் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 15 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சேவை தளம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் நம்பியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதோடு ரிலையன்ஸ் ஆப்லைன் வர்த்தக விரிவாக்கத்தையும் இதே நேரத்தில் செய்து வருகிறது. இப்படியிருக்கையில் அடுத்த 100 பில்லியன் டாலர் மதிப்பு ரீடைல் வர்த்தகத்தைச் சார்ந்து வந்தாலும் வியப்பும் அடைய தேவையில்லை.
முகேஷ் அம்பானி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுமார் 3 பில்லியன் டாலர் தொகையை நிறுவனத்தைக் கைப்பறுவதற்காக மட்டுமே செலவு செய்துள்ளார்.
4 லட்சம் ஆர்டர்கள்
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த ஜியோமார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் தினமும் 4 லட்சம் ஆர்டர்கள் குவிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மில்ஸ்பேஸ்கட் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திச் செய்யும் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் அடுத்த சில வருடத்தில் ஒரு நாளுக்கு 1 லட்சம் ஆர்டர்கள் குவிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் ரிலையன்ஸ் தொடர்ந்து நிறுவனங்களை கைப்பற்றி வருவதால் சந்தையில் இருக்கும் சக போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக