Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீசி காவலர் சம்பவ இடத்திலேயே பலி..! ஒருவர் கைது


தூத்துக்குடி ரவுடியை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் உயிரிழப்பு


தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதனையடுத்து, வல்லநாடு மணக்கரை அருகே மணலை கொள்ளையில் ஈடுபட்ட ரவுடியை துரத்தி சென்ற போலீசாரை நோக்கி வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் சுப்பிரமணியன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசிய துறை முத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மணல் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக