iQOO
5 மற்றும் iQOO 5 Pro 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 SoC உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களோடு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
iQOO 5 மற்றும் iQOO 5 Pro
iQOO
5 மற்றும் iQOO 5 Pro ஸ்மார்ட்போனானது 6.56 அங்குல முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே
அம்சத்தோடு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2376x1080 பிக்சல்கள்
தீர்மானத்தோடு வருகிறது. இதில் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு அம்சத்தோடு
அறிமுகப்படுத்துகிறது.
சீனாவில் ஐக்யூ 5 ஸ்மார்ட்போன்
ஐக்யூ
நிறுவனம் சமீபகாலமாக அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்கள்
மத்தியில் தங்களது பெயரை நிலைநிறுத்த செயல்பட்டு வருகிறது. ஐக்யூ இன்று சீனாவில்
ஐக்யூ 5 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஐக்யூ 5 மற்றும் ஐக்யூ 5 ப்ரோ
ஸ்மார்ட்போனானது 128 ஜிபி சேமிப்பு அம்சம் 8 ஜிபி ரேம் பவர் ஆதரவோடு இந்த
ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
ஐக்யூ 5 மற்றும் 5 ப்ரோ விலை
ஐக்யூ
அறிமுகப்படுத்தியுள்ள ஐக்யூ 5 விலை 3998 யுவான் அதாவது ரூ.43,130 என்ற விலையிலும்,
ஐக்யூ 5 ப்ரோ 128 ஜிபி சேமிப்பு வசதி 12 ஜிபி ரேம் அம்சமானது 4298 யுவான் அதாவது
தோராயமாக ரூ.46,368 என்ற விலையில் கிடைக்கலாம் என தெரிகிறது.
256 ஜிபி சேமிப்பு வசதி
அதேபோல்
8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஐக்யூ 5 ப்ரோ விலை தோராயமாக ரூ.53,920
என்ற விலையும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட அம்சத்தின் விலை
ரூ.59,318 என்ற விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்
அறிமுகப்படுத்த
இருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம்
இயக்கப்படுகிறது. இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இதில்
உள்ளது. இதில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி என இரண்டு அளவில்
கிடைக்கிறது.
ஐக்யூ இசட் 1 ஸ்மார்ட்போன்
அதேபோல்
ஒரு வாரத்துக்கு முன்பு மிட் அடுக்கு ஐக்யூ இசட் 1 ஸ்மார்ட்போனை சீனாவில்
அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்
அறிமுகப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக