Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

படித்ததில் பிடித்தது.. சிரிக்க சிரிக்க சிரிப்பு - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-----------------------------------------------------------------------
    சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
-----------------------------------------------------------------------
ராம் : மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படி பேசக்கூடாது...
குமார் : ஏன்...?
ராம் : மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க-ன்னு கேட்டா, பல்செட் போடுறோம்-ன்னு சொல்றாங்க.
குமார் : 😂😂
-----------------------------------------------------------------------
பிரவீன் : கரும்புக்கும், எறும்புக்கும் என்ன வித்தியாசம்?...
லோகு : தெரியலையே.
பிரவீன் : கரும்ப நாம கடிக்குறோம். எறும்பு நம்மள கடிக்குது.
லோகு : 😏😏
-----------------------------------------------------------------------
அருண் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...
குமார் : ஏன்டா?
அருண் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...
குமார் : 😳😳
-----------------------------------------------------------------------
       படித்ததில் பிடித்தது...!!
-----------------------------------------------------------------------
விடையில்லாத கேள்விகளும்,
தீர்வில்லாத பிரச்சனைகளும்,
எல்லோருடைய வாழ்விலும் உண்டு...
புன்னகைத்து கொண்டே கடந்து
செல்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது...

அவமானம், தோல்வி, சோதனை, தனிமை
இவைகள் கேட்பது
உன் கண்ணீரையும், வலியையும் அல்ல...
அவை கேட்பது உன் நம்பிக்கையையும்,
வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும்தான்.
-----------------------------------------------------------------------
            சிறந்த வரிகள்...!!
-----------------------------------------------------------------------
கற்றுக்கொள்வதாக முடிவெடுத்துவிட்டால்
முதலில் கவலைகளை மறக்க கற்றுக்கொள்ளுங்கள்...!!
-----------------------------------------------------------------------
     குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------------------
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

விளக்கம் :

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கக்கூடாது. அதேபோல் துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக