Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போது கவனிக்க வேண்டியது.

1. திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்

2.அத் திருநீறு இடது கைக்கு மாற்றக் கூடாது

3.நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்.

4. திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும்.

5.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது .

திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது :

1.கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு இட வேண்டும்

2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய" 
"ஒம் சிவாய நமஹ" உச்சரித்தல் நல்லது.
உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே.

3. திருநீறு என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம்..

4.வலது கை சுண்டுவிரல், கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால்
திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும்.
இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக்கொள்ளலாம்

பயன்கள்:

1. சிவனருள்

2. மன அமைதி

3. நெற்றியின் புருவ மத்தியியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது.
தீருநீறு ,குங்குமம் வைக்கும் போது தவிர்க்கப்படுகிறது.

4. நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது .

5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருகஷ்டியில் இருந்து விலக்கு.
சுத்தமான வெண் திருநீறு வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும்.பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும் கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் தீர்க்கு வல்லமை உள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக