எல்லா வீடுகளிளும் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம் ஒன்று தான். அதில் ஆண், பெண் பாகுபாடு என்ற கதையே கிடையாது. ஏனென்றால் அதுநம்மையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்துகிறது.
ரோஜாச் செடிகளை நீங்கள் தொட்டிகளில் தான் வளர்ப்பதுண்டு ஆனால் அதைவிடமண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்குமாம். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்று சிலர் சொல்லி கேட்பதுண்டு. ஆனால் உண்மை அதுயில்லை எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலே போதுமானது ஆகும்.நமது தொட்டிகளில் அசால்ட்டாக ரோஜாச் செடிகளை வைத்து அதிகளவில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க வைக்க முடியும்.
பெரும்பாலும் செடிகள் வளர்க்க தரமான மண் வளம் இருக்க வேண்டும். இல்லையெனியில் செடி வேகமாக பட்டுப்போவதோடு செழித்து வளராது. அதனால் தொட்டிகளில் மண்ணைபோட்டு தான் வளர்ப்பதுண்டு. ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிகளில் அடைக்கப்பட்ட மண்ணில் எவ்வளவு நாள் ஊட்டச்சத்து அப்படியே இருக்கும் தெரியுமா.
மண் புழு உரம் முழுக்க முழுக்க செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்கிறது.செடிகள், உரங்கள் விற்கும் கடைகளில் இந்த மண்புழு உரங்கள் கிடைக்கின்றன. அதே நீங்கள் வளர்க்கும் தொட்டியில் போடா வேண்டும். மேலும் மண்ணிற்கு பதிலாக கொக்கோ பெட் பிரிக்கை பயன்படுத்துங்கள். பெயரை கண்டு பயப்பட தேவையில்லை இது வேறோன்றும் இல்லை. நன்கு சுத்தப்படுத்தி மட்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை தான் இதை பயன்படுத்துங்கள்.
- தொட்டியில் வளர்ப்பதால் அப்போ அப்போ தொட்டியை இடம் மாற்றம் செய்யக்கூடாது.
- முக்கியமாக உச்சி வெயில் படும் இடத்தில் ரோஜா தொட்டியை வைக்கக்கூடாது. மிதமான வெயில் படும்படி வைத்தாலே போதுமானது.தினமும் காலை, மாலை இரண்டு வேளை தண்ணீர் ஊற்றுவது அவசியம். ஆனால் மதிய நேரத்தில் முக்கியமாக ஊற்றக்கூடாது.
- அடிக்கடி வெங்காயத் தோல், முட்டை ஓடு ஆகியவற்றை அளவாகப் போடுங்கள்.
- மூன்று வாரத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மண்புழு உரத்தை போடுவது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக