செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பசுவுக்கு உடம்பு சரியில்லை... இதுல ஒரு பெயர் இருக்கு... என்னன்னு கண்டுபிடிங்க...!!


சிரிக்க மட்டுமே !!

ஆசிரியர் : உன் பெயர் என்னப்பா?
மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை.
ஆசிரியர் : என்னப்பா சொல்ற? புரியலையே?
மாணவன் : என் பெயர் 'கௌ" 'சிக்" சார்!
ஆசிரியர் : நீங்க ஒண்ணும் தூய தமிழ்-ல பேசி என்னைக் கொல்ல வேண்டாம். ஆங்கிலத்திலேயே சொல்லுங்க.
மாணவன் : சரி சார்!
ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன?
மாணவன் : எங்க அப்பா பேரு KING COW MILK சார்!
ஆசிரியர் : ஏன்டா மறுபடியும் என்னை குழப்பற? தமிழ்லயே சொல்லுடா!
மாணவன் : எங்க அப்பா பேரு 'ராஜ" 'கோ" 'பால்" சார்.
ஆசிரியர் : ஆள விடுடா சாமி! இனிமே சத்தியமா உங்கக்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.
மாணவன் : 😜😜
-----------------------------------------------------------------------------------------------------------
புத்திசாலி மனைவி...!!

விமலா : டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி, ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடுறேன்... அவ்வளையும் சாப்பிட்டுட்டு, கீழ கிடக்குற குப்பையையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார்... என்னான்னு பாருங்க...!

டாக்டர் : சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?

விமலா : ஒரு வாரமா இப்படி இருக்கு!

டாக்டர் : இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே?

விமலா : வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்