Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

தோல்வி எப்போது வெற்றியாகிறது தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க மட்டுமே...!!
மனைவி : டின்னர் வேணுமா?
கணவன் : சாய்ஸ் இருக்கா?
மனைவி : ரெண்டு இருக்கு!
கணவன் : என்னென்ன?
மனைவி : வேணுமா? வேண்டாமா?
கணவன் : 😏😏
------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது..

ஒரு நகரத்தில் பெருஞ்செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் நல்ல செயல்களுக்கு வாரி வழங்கும் ஈகை குணம் கொண்டவர். ஒருநாள் பூங்கா ஒன்றில் நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது கந்தல் ஆடை அணிந்த பிச்சைக்காரன் எதிரே வந்தான்.

பிச்சைக்காரன் : ஐயா! நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும், என் தோற்றத்தை பார்த்து என்னைப் பிச்சைக்காரன் என்று எண்ண வேண்டாம், நான் ஒரு எழுத்தாளன், புத்தகம் ஒன்று எழுதி உள்ளேன்.

பெருஞ்செல்வர் : என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய்?

பிச்சைக்காரன் : செல்வந்தனாக நூறு வழிகள் என்ற புத்தகம் எழுதி உள்ளேன்.

பெருஞ்செல்வர் : சிரித்துக் கொண்டே எழுத்தாளன் என்கிறாய், செல்வந்தனாக நூறு வழிகள் என்ற புத்தகம் எழுதி உள்ளேன் என்கிறாய். நீ எழுதிய புத்தகத்திற்கும், உன் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லையே என கேட்டார்.

பிச்சைக்காரன் : ஐயா! செல்வந்தனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழி என்றான்.

உடனே, அந்தப் பிச்சைக்காரனுக்கு கை நிறைய செல்வத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு சென்றார் அச்செல்வந்தர்.
------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது, அதுவே தொடரப்படும்போது வெற்றியாகிறது.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால், நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும், மூலகாரணமாகவும் இருக்கிறார்.

தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்!

பிறரை சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.

விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக