நாடு தழுவிய லாக்டவுன் மற்றும் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை கருத்தில் கொண்டு இந்திய வங்கிகள் தங்கள் சேவைகளை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதனை ஈடுகடும் நோக்கிக்கத்தின் கீழ் ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் வங்கி சேவை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவையின் வழியாக ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ், கடைசி மூன்று பரிவர்த்தனைகள், கிளைகள் மற்றும் ஏடிஎம்களைக் கண்டறிதல், கடன் சலுகைகள் போன்ற விவரங்களைப் பெறுதல், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் பிளாக் செய்வது போன்ற அடிப்படை வங்கி சேவைகளைப் அணுகலாம், அதுவும் இது எல்லாமே வாட்ஸ்அப் வழியாகவே!
இந்த வாட்ஸ்அப் சேவை ஒரு பிரத்யேக தொலைபேசி எண் மூலம் செயல்படுகிறது, இது ஒரு பயனர் அவர்கள் பெற விரும்பும் எந்தவொரு வங்கி சேவையையும் "டைப்" செய்ய அனுமதிக்கும். இந்தியில் சேவையைப் பயன்படுத்த விரும்புவோருக்கு தனி தொலைபேசி எண் வழங்கப்படுகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது புதிய வாட்ஸ்அப் பேங்கிங்கை ஒரு 24 மணி நேர சேவையாக ஆக்கியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தெரிவிக்கவும் முயன்று வருகிறது. சுவாரசியமான விடயம் என்னவென்றால் ஐசிஐசிஐ வங்கியுடன் தொடர்பு இல்லாத மற்றவர்கள் கூட இந்த வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி தங்களுக்கு அருகிலுள்ள கிளைகளையும் ஏடிஎம்களையும் கண்டறியலாம்.
- உங்கள் ஸ்மார்ட்போனில் ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்கான தொலைபேசி எண்ணை (ஆங்கிலத்திற்கு +91 93249 53001 அல்லது ஹிந்திக்கு 9324953010) சேமிக்கவும்.
- பின்னர் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி இந்த எண்ணுக்கு ஒரு எளிய 'Hi' எனும் மெசேஜை அனுப்பவும்.
- இப்போது உங்களுக்கு ஒரு தானியங்கி ரெஸ்பான்ஸ் (automated reply) கிடைக்கும். அதில் ஐசிஐசிஐ வங்கியானது வாட்ஸ்அப் வழியாக வழங்கும் சேவைகளின் Keywords (முக்கிய வார்த்தைகளின்) பட்டியல் இருக்கும்.
- இப்போது, குறிப்பிட்ட சேவைகளைப் பெறுவதற்கு, ஐசிஐசிஐ வங்கி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட கீவேர்ட் சொற்களை டைப் செய்ய வேண்டும், அவ்வளவுதான்.
எடுத்துக்காட்டிற்கு, அக்கவுண்ட் பேலன்ஸ்-ஐ அறிய 'Balance,' 'Bal,' 'ac bal, போன்றவைகளை அனுப்பலாம்,இதே போல கடைசி மூன்று பரிவர்த்தனைகளைப் பார்க்க 'stmt,' 'History' 'Statement' போன்றவைகளை அனுப்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக