Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

கொரோனா தாக்கம்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள கட்!

கொரோனா தொற்று பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விளையாட்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

இந்திய கிரிக்கெட் வீரர்கள்
கிட்டத்தட்ட அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து வீரர்களும் இந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு மிகப்பெரிய சம்பளத் தொகையை கால்பந்து அணிகள் கட் செய்துள்ளது.


குறிப்பாக ஜுவாண்டஸ் அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட வீரர்கள் இத்தாலியில் நிலவும் மிகவும் மோசமான சூழ்நிலையை சமாளிக்க இந்த சம்பள கட்டை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. மேலும் மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரொனால்டோ தனது 4 மாத சம்பளத்தையும் விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தேகத்தில் ஐபில்

இந்நிலையில் அதிகளவில் வருமானம் ஈட்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு நடப்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள்ம் கட் செய்யப்படும் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு தலைவர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கவில்லை

இதுகுறித்து மல்ஹோத்ரா கூறுகையில், “பிசிசிஐ என்பது கிரிக்கெட் வீரர்களின் கம்பெனி. ஒரு கம்பெனி நஷ்டத்தை சந்திக்கும் போது, சில சிக்கல்கள் இருக்கும். ஐரோப்பாவில் கால்பந்து வீரர்கள் அதிகளவில் வருமானம் ஈட்டுபவர்கள். அவர்களுக்கே சம்பள கட் உள்ளது என கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்படி ஒரு நிலை வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

அனைவரும் உதவ வேண்டும்

இந்த கடினமான நாட்களில் அனைவரும் தங்களின் பாக்கெட்டில் இருந்து உதவி செய்ய முன்வர வேண்டும். வீரர்களின் சம்பளத்தை குறைப்பது சரியானதாக இருக்காது என தெரியும். ஆனால் வருமானம் இல்லாத போது கிரிக்கெட் வீரர்களுக்கு கண்டிப்பாக சம்பள கட் இருக்கத்தா செய்யும்.

எவ்வளவு பிடித்தம்

இது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் வரை அமல்படுத்தப்படும். உதாரணமாக ரஞ்சிக்கோப்பை தொடரில் வீரர் ஒருவருக்கு ஒரு போட்டிக்கு ரூ. 1.5 லட்சம் வழங்கப்படும். அது தற்போது ரூ. 1 லட்சமாக குறைக்கபடும். போட்டிகள் இல்லை என்றாலும், ஐபிஎல் நடக்கவில்லை என்றாலும் பிசிசிஐக்கு ரூ. 300 கோடி நஷ்டம் ஏற்படும். அதே நேரம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால் ஐசிசியிடம் இருந்து பிசிசிஐக்கு பணம் கிடைக்காது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக