புதன், 20 நவம்பர், 2019

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை எப்போது வரும்... உங்களுக்கு தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com இது சிரிக்க மட்டுமே...!!
சீலா : குழந்தைக்கு செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க.
பாபு : அவரை எதுக்கு கேக்கணும்?
சீலா : டாக்டரை கேக்காம குழந்தைக்கு எதுவும் தரக்கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.
பாபு : 😳😳
-----------------------------------------------------------------------------------------------------------
சீனு : ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
தீபக் : நோயோடதான்!
சீனு : 😩😩
-----------------------------------------------------------------------------------------------------------

கலா : வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிக்கிட்டே இருக்காரு..
பானு : ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடுறாரா..?
கலா : இல்ல.. டாக்டர் கொடுத்த டானிக்க கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாரு..!
பானு : 😂😂
-----------------------------------------------------------------------------------------------------------

நோயாளி : மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?
டாக்டர் : பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்.
நோயாளி : 😳😳
-----------------------------------------------------------------------------------------------------------
 குறளும்... பொருளும்...!!

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பொருள் :

பிறப்பு, வீடு என்பன போல் இரண்டு இரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------

👭👬நண்பன் என்பவன் யார்?👭👬

எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவனே உன் நண்பன்...
-----------------------------------------------------------------------------------------------------------

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை எப்போது வரும்?

ஆசைகள் இல்லாத வாழ்க்கையை
நீ எப்போது தேடி செல்கிறாயோ...
அப்போது, துன்பங்கள் இல்லாத வாழ்க்கை
உன்னை தேடி வரும்..
-----------------------------------------------------------------------------------------------------------
 
😀😀சிரிப்பு...!!😀😀

😀 சிரிப்புக்கும், மனதிற்கும் நேரடித்தொடர்பு உள்ளது.

😀 சிரிப்பு அலைகள்... நம்மிடம் பிறரை ஈர்க்கும்.

😀 கவலை அலைகள்... பிறரை நம்மிடமிருந்து விரட்டும்.

😀 சந்தோஷ அலைகள்... நம்மை சுற்றி நேர் மறையான (positive) எண்ணங்களை பரப்பும்.

😀 சோக அலைகள்... நம்மைச்சுற்றி எதிர் மறையான (negative) எண்ணங்களை பரப்பும்.

😀 ஆகவே உங்களால்... சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.

😀 அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவு கோலாகவும் சிரிப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்