Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 நவம்பர், 2019

உணவுக்குப் பின் பழங்களை சாப்பிடுவது சரியா?


Image result for உணவுக்குப் பின் பழங்களை சாப்பிடுவது சரியா?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


பழங்கள் தரும் ஆரோக்கியம்..!!

நாளுக்குநாள் நவீன உலகம் வளர்ச்சி அடைகிறது என்பது மறுக்க முடியாத உண்மையே. இன்று நாம் பீட்சா, பர்கர் யுகத்தில் இருக்கிறோம். இதனால் தினசரி உணவில் பழங்களை எடுத்து கொள்வதையே மறந்துவிட்டோம்.

பழங்களில் மிக குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராது.

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்?

பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. மென்று சாப்பிடும்போது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல்நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாக சாப்பிடலாம்.

பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது.

பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கி சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கி சாப்பிடக்கூடாது.

பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பக்கட்டத்தில் எந்தவித தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாக செரிமான மண்டலம் பாதிப்படையும்.

உணவு உண்பதற்கு முன்னர் பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களை சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.

நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவை சாப்பிடலாம்.

ஓர் உணவு வேளைக்கும், மற்றொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கெட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம். சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட பழங்களை உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்தவிதமான சத்துக்களும் கிடைக்காது.

மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம்.

காலை வெறும் வயிற்றில் பழங்களை உண்டால் இளநரை, தலைமுடி கொட்டுதல் மற்றும் கண்களை சுற்றி வரும் கருவளையம் போன்றவற்றை தவிர்க்க இயலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக