சிரிக்கலாம்
வாங்க...!!
அப்பா : யார்கிட்ட பேசினாலும் டா.டி.
போட்டு பேசக்கூடாது... புரியுதா?
மகன் : Ok டா.டி.
அப்பா : 😠😠
-----------------------------------------------------------------------------------------------------
ராமு : குரைக்கின்ற நாய் கடிக்காது.
சோமு : ஏன்?
ராமு : ஒரே சமயத்துல ரெண்டு வேலைய அதால
செய்ய முடியாதுல... அதான்...!!!
சோமு : 😁😁
----------------------------------------------------------------------------------------------------
சீனு : ஒரு யானை வேகமாக ரேஷன்கடை
பக்கம் ஓடுது. அது அங்கபோய் என்ன வாங்கும்?
பாபு : தெரியலையே...
சீனு : மூச்சு வாங்கும்.
பாபு : 😩😩
----------------------------------------------------------------------------------------------------
ஆச்சரியக்குறியா?
கேள்விக்குறியா?
கடனும் சரி, சேமிப்பும் சரி,
அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
சிறியதாக தெரியும் தொகை,
ஒரு நாளில் பெரியதாய் வளர்ந்து
நிற்கும்.
வளர்ந்து நிற்பது சேமிப்பாக இருந்தால்
வாழ்க்கை ஆச்சரியக்குறி (!) ஆகிவிடும்.
அதுவே கடனாக இருந்தால்
வாழ்க்கை கேள்விக்குறி (?) ஆகிவிடும்.
----------------------------------------------------------------------------------------------------
அப்படியா?
கொஞ்சம் வளர்ந்தா எல்லாம் சரியாகிடும்...
வேலைக்கு போனா எல்லாம் சரியாகிடும்...
கல்யாணம் பண்ணுனா எல்லாம்
சரியாகிடும்...
குழந்தை பிறந்தா எல்லாம்
சரியாகிடும்...
இப்படி சொல்றவங்கள தூக்கி போட்டு
மிதிச்சா எல்லாம் சரியாகிடும்..
----------------------------------------------------------------------------------------------------
இது
எப்படி இருக்கு?
வானத்தில் 3 கிளிகள் பறந்து
கொண்டிருந்தது.
முதல் கிளி என் பின்னால் இரண்டு
கிளிகள் வருவதாக கூறியது.
இரண்டாம் கிளி என் பின்னால் இரண்டு
கிளிகள் வருவதாக கூறியது.
மூன்றாம் கிளியும் என் பின்னால் இரண்டு
கிளிகள் வருவதாக கூறியது.
எப்படி?
ஏனா... சொன்னதை சொல்லுமாம்
கிளிப்பிள்ளை...
----------------------------------------------------------------------------------------------------
என்ன
ஒரு புத்திசாலித்தனம்...?
ஒரு மனிதர், தான் காலமெல்லாம்
சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கு கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து
வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து
'நான் இறந்துவிட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே
என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிடு" என்று
உறுதிமொழி வாங்கிக் கொண்டார். தன் கணவரின் கடைசி ஆசை என்பதால் அவர் மனைவியும்
உறுதிமொழி செய்துவிட்டார்.
அம்மனிதர் இறந்த பின் எல்லா
ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, 'கொஞ்சம்
பொறுங்கள்" என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு கவரையும் வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும், அவள் கணவருடைய கருமித்தனத்தையும் அறிந்திருந்த அவள்
தோழி 'நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்துவிட்டாயா?" என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி, 'அவர்
சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக உறுதிமொழி கொடுத்துவிட்டு மாற்றவா முடியும்?
அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு, அந்த
முழுத்தொகைக்குமான காசோலையை வைத்துவிட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால்
மாற்றி அதை அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை"
என்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக