ஆறாம் எண் சிறப்பு நிறைந்த எண்ணாகும்.
ஆறு என்ற எண்ணை எடுத்துக்கொண்டால் பல சொல்லலாம். முருகனுக்கு ஆறுபடை வீடு,
விநாயகருக்கு ஆறு படை வீடு, சிவனுக்கு ஆறு முகங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். 6, 15, 24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள்
சுக்கிரனின் ஆதிக்கத்திற்குரியவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள்.
குண நலன்கள் :
நேர்மையையே
குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி
செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள்.
மிகவும்
பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. தன்னம்பிக்கையும், அசட்டு
தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக்
கொள்வார்கள்.
குதர்க்கமாகவும்,
பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள்.
பிடிவாத
குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம்.
நீதியை
நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை
ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான்
பிறருக்கு தானமாக கொடுப்பார்கள்.
அதிர்ஷ்டக்கல் :
சுக்கிரனின்
ஆதிக்கத்திற்குரிய 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வைரக்கல் அல்லது வைரத்தை
போலவே குணநலன் கொண்ட ஜிர்கான் கற்கள் அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
பரிகாரம் :
6ஆம்
ஆதிக்கத்திற்குரியவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது
செல்வத்தை அள்ளித் தர வல்லது.
அதிர்ஷ்டம்
தருபவை :
அதிர்ஷ்ட
தேதி - 6, 15, 24, 9, 18, 27.
அதிர்ஷ்ட
நிறம் - வெளிர்நீலம்.
அதிர்ஷ்ட
திசை - தெற்கு.
அதிர்ஷ்ட
கிழமை - வெள்ளி.
அதிர்ஷ்ட
கல் - வைரம்.
அதிர்ஷ்ட
தெய்வம் - ஸ்ரீலட்சுமி.
சுக்கிரனின்
ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்களின் எண்ணுக்குரிய ரகசியத்தை தெரிந்துக் கொண்டு
பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து வந்தால் தீமைகள் நெருங்காது மற்றும் நற்பலன்கள்
அனைத்தும் கிட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக