புதன், 18 டிசம்பர், 2019

தொடரும் அட்டூழியங்கள்... பாலியல் வன்புணர்விலிருந்து தப்பிய இளம்பெண் மீது துப்பாக்கி சூடு

த்திரமடைந்த பொதுமக்கள், கைது செய்யப்பட்ட ஒருவரது வீட்டுக்கு தீவைத்தனர். இது பரபரப்பை மேலும் அதிகரித்தது.

மோடியோ, ராகுல் காந்தியோ யார் சொன்னதாகவும் இருக்கட்டும், இந்தியா ரேப் கேப்பிட்டலாகத்தான் ஆகிவிட்டது. பாலியல் வன்கொடுமைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபக்கத்து மனக்கவலை என்றால், வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்களும் சிறுமிகளும் கொல்லப்படும் கொடுமை மறுபக்கத்து மனக்கவலையாக இருக்கிறது.

இந்நிலையில் பிகார் மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நால்வரிடமிருந்து தப்பிய பெண், குற்றமிழைக்க முயன்றவர்களின் கூட்டாளிகளால் சுடப்பட்ட சம்பவம் பரப்ரபை ஏற்படுத்தி உள்ளது.

பிகார் மாநிலம் ரோஹ்டாஸ் மாவட்டம் ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குடட்ட கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இயற்கை அழைப்பின் காரணமாக அதிகாலை வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத நால்வர் இந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒருவழியாகத் தன்னைத் தற்காத்துக்கொண்டு தப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்புணர்வு செய்யமுயன்ற நால்வரின் கூட்டாளிகளால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தட் தாக்குதலை நிகழ்த்திய 4 பேரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண், ஜமுஹார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கைது செய்யப்பட்ட ஒருவரது வீட்டுக்கு தீவைத்தனர். இது பரபரப்பை மேலும் அதிகரித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டார். இருந்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
எரிக்கப்பட்ட வீட்டுக்கு சொந்தக்காரர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே பதற்றம் அதிகமாக இருக்கும் நிலையில் , இது மேலெஉம் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். எனவே விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரோஹ்டாஸ் மாவட்ட எஸ்.பி. சத்யவீர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164இன் படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமும் நீதிபதி முன்னிலையில் பெறப்பட்டுள்ளது.

கிராமத்தின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதூபோன்ற சம்வங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக, பக்கத்து ஊர்களின் காவல்நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்