Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

தேங்காய் மிட்டாய் தயாரிக்கும் முறை !!

 Image result for தேங்காய் மிட்டாய் தயாரிக்கும் முறை !!
னிப்பு என்றாலே நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதிலும் இப்போது நாம் உண்ணும் இனிப்பு வகைகளை காட்டிலும் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான தேங்காய் மிட்டாய் நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத இனிப்பு வகையாகும். அதனை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபம் ரூடவட்ட முடியும். இப்போது தேங்காய் மிட்டாய் எப்படி தயாரிப்பது? என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

1. தேங்காய்
2. சர்க்கரை
3. முந்திரி பருப்பு
3. ஏலக்காய் தூள்
4. நெய்

தயாரிக்கும் முறை :

 முதலில் தேங்காயை நன்றாக துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

 பிறகு தேவையான முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டு பொன் நிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

 மேலும் ஒரு அடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பாகு கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

 பின்பு பாகு தயாரானதும் அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும். நன்றாக மிட்டாய் திரண்டு வரும்போது வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு பெரிய தட்டில் நெய் தடவி கொண்டு அதில் காய்ச்சிய மிட்டாயை கொட்டி ஆற விடவும். பாதி ஆறியதும் நமக்கு தேவையான அளவுகளில் துண்டு போட்டு கொள்ளலாம்.

நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டை கவிழ்த்தால் தேங்காய் மிட்டாய் ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.

விற்பனை செய்யும் முறை :

தயார் செய்த தேங்காய் மிட்டாயை டப்பாவில் அடைத்து அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும் அல்லது சில்லரையாகவும் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக