சிரிக்கலாம் வாங்க...!!
சீலா : எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே வரமாட்டேங்குது..
ராணி : ஏன்?
சீலா : பூரிக்கட்டைய இரும்புல வாங்கிக்கிட்டு வந்திருக்கிறாருன்னா பாரேன்...
ராணி : 😂😂
---------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : மீன் பேசாது ஏன் தெரியுமா?
மாணவன் : உங்க தலைய தண்ணிக்குள்ள அமுக்குனா பேசுவீங்களா சார்?...
ஆசிரியர் : 😩😩
---------------------------------------------------------------------------------------------------
அப்பாவிற்கு என்ன தெரியும்?
தந்தை பற்றி மகன்...
5 வயது : என் தந்தையால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை...
7 வயது : என் தந்தைக்கு பல விஷயங்களை பற்றி நன்கு தெரியும்...
10 வயது : என் தந்தைக்கு சில விஷயங்களை பற்றி தெரியாது...
12 வயது : என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது...
14 வயது : அவரா? அவருக்கு காலம் மாறியது தெரியாது...
21 வயது : கிடக்கிறார் அவர்... அவரிடம் சென்று யோசனை கேட்பதா?
35 வயது : அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரியும்...
40 வயது : அவர் என்ன நினைக்கிறார்? என்பதை கேட்பதில் தப்பில்லையே...
45 வயது : அவரின் யோசனையை கேட்டு முடிவெடுக்கலாமே...
50 வயது : என் தந்தை இது போன்ற விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பார் தெரியுமா?
55 வயது : அவர் இல்லாதது உண்மையிலேயே பெரிய கஷ்டமாக இருக்கிறது.
60 வயது : அவருடைய அறிவும், அனுபவமும் எங்கே? நான் எங்கே?
---------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
வாழ்க்கை Normal-லா போனா
வழியில குறுக்க வர்ற
நாயைக் கூட கண்டுக்காதே...
வாழ்க்கை Serious-ஆ போனா
வழியில குறுக்க வர்ற
சிங்கத்தைக்கூட விட்டுவிடாதே...
---------------------------------------------------------------------------------------------------
ஹா... ஹா... சிரிக்க மட்டுமே...!!
நாலு வகை சட்னி தினமும் கிடைக்கும்
என எதிர்பார்ப்பில் ஆரம்பித்து...
நாலு நாளா ஒரே சட்னியை
வச்சு சாப்பிடும் எதார்த்தத்திற்கு பெயர்தான் திருமணம்...
---------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
விளக்கம் :
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணி பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக