திங்கள், 27 ஜூலை, 2020

எது உண்மையான அறிவு?... எதிரிகளை ஏன் கவனிக்க வேண்டும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------------------------
சீலா : ரொம்ப நீளமான Music Instrument  எது?
மாலா : தெரியலையே...
சீலா : புல்(லாங்)குழல் தான்...
மாலா : 😜😜
---------------------------------------------------------------
கடைக்காரர் : இந்த துணி சூப்பர் Quality... கிழியவே கிழியாது...
சீனு : அப்புறம் எப்படி எனக்கு ஒன்றரை மீட்டர் கிழிச்சு தரப்போறீங்க?
கடைக்காரர் : 😏😏
---------------------------------------------------------------
நோயாளி : ஏன் டாக்டர் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே பில் வாங்குறாங்க?...
டாக்டர் : ஆமா... ஆப்ரேஷன் பண்ணினதுக்கு அப்புறம் நீங்க இறந்து போயிட்டா என்ன பண்றது?. அதான்...
நோயாளி : 😳😳
---------------------------------------------------------------
ஆசிரியர் : எல்லோரும் உங்களுக்கு பிடிச்ச Animals வரைய சொன்னேனே... வரைஞ்சிங்களா?...
மாணவன் : நான் மாடு வரைஞ்சிருக்கிறேன் சார்...
ஆசிரியர் : ஏன் மாட்டுக்கு வாய் வரையில...?
மாணவன் : நீங்க தான சார் சொன்னீங்க.. மாடு வாயில்லா ஜீவன்னு...
ஆசிரியர் : 😑😑
---------------------------------------------------------------
ஹா... ஹா... இது எப்படி இருக்கு?
---------------------------------------------------------------
தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி...
கப்பலுக்குள்ள தண்ணி போனா காலி...😂😂

ஓட்டப்பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்,
பரிசு என்னமோ கைக்குத்தான் கிடைக்கும்...😌😌

சோடாவ ஃப்ரிட்ஜ் ல வெச்சா கூலிங் சோடா ஆகும்...
அதுக்காக வாசிங் மெசின்ல வெச்சா வாசிங் சோடா ஆகுமா?😬😬
---------------------------------------------------------------
கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்...
ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும்...😝😝
---------------------------------------------------------------
பொன்மொழிகள்...!
---------------------------------------------------------------
👉 ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மையை தரும்.

👉 மனம் ஒரு நல்ல வேலைக்காரன். ஆனால், மோசமான எஜமான்.

👉 உங்கள் எதிரிகளை கவனியுங்கள். அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.

👉 நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்