இது சிரிக்க மட்டுமே...!!
மனைவி : என்னங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க.. அதுல நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குற மாதிரி இருந்துச்சு..
கணவன் : ஆனா, அதுக்கு உங்க அப்பா பில் கட்டுற மாதிரி எனக்கு கனவுல வந்துச்சு..
மனைவி : 😏😏
----------------------------------------------------------------------
ராம் : என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்குனா கூட ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பாத்துதான் வாங்கிட்டு வருவான்.
பாபு : என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்தி பாத்துதான் வாங்குவான்..
ராம் : 😝😝
----------------------------------------------------------------------
வாழ்க்கை படிகள்...!!
வாழ்க்கை படிகள்...!!
எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்.
எல்லா படிகளும் கடக்கக்கூடியவையே...
உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே
செயலில் வெற்றியைத் தரும்...
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
படித்ததில் பிடித்தது...!!
எளிதானதை நோக்கி செல்லாதீர்கள்...
அனுபவம் என்னும் தோழன் கிடைக்காது.
சரியானதை நோக்கி செல்லுங்கள்.
கடினமானது என்றாலும் சிறப்பாக அமையும்.
----------------------------------------------------------------------
முக்கியமான ரகசியம்...!!
அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்த்து வேதனைப்படுவதை முதலில் நிறுத்துங்கள். உங்களுடைய முழு திறமையை பயன்படுத்தி உங்களால் செய்ய முடிந்ததை எல்லாம் முழுமையான ஈடுபாட்டுடன் குறை வைக்காமல் செய்து பாருங்கள்.
மற்றவர்கள் உங்களை பார்த்து சிரித்துவிட்டு போகட்டுமே... பாவம், மனிதர்களாக வாழவே இவர்கள் லாக்கியற்றவர்களாக இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டு அவர்களை ஒதுக்குங்கள்.
அல்லது ஏதோ ஒரு வகையில் நம்மாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி தர முடிகிறதே என்று பெருமை கொள்ளுங்கள்.
மொத்தத்தில், மாற்ற இயலாத எதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு வீணாக வேதனை கொள்ளாமல் உங்கள் மனசு ஆனந்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
உங்களை நீங்களே குறையாக நினைத்தால், உங்களால் செய்ய முடிவதைக் கூட நிறைவாக செய்து முடிக்க முடியாது.
இது நீங்களே அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக