Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

7-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குருபகவானிற்கு நிகர் யாரும் இல்லை. இதைத்தான் 'குரு பார்க்க கோடி நன்மை" என்கிறார்கள். பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் குருபகவான்.

இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக 'பிரகஸ்பதி" என்று அழைக்கப்பட்டார். பிரகஸ்பதி என்ற சொல்லிற்கு 'ஞானத் தலைவன்" என்று பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், குரு, வியாழன் என பல பெயர்கள் உண்டு.

பிரகஸ்பதி, காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியையும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார்.

லக்னத்திற்கு 7-ல் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பிரபலமான யோகங்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும்.

7ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 நல்ல வாழ்க்கைத்துணை அமைவார்.

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 அறிவாற்றல் உடையவர்கள்.

👉 கௌரவ பதவிகள் வகிக்கக்கூடியவர்கள்.

👉 தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

👉 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

👉 உறவினர்கள் அதிகம் உடையவர்கள்.

👉 மதிப்பு, மரியாதையுடன் கூடிய வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

👉 உயர்ந்த நோக்கங்களையும், இலட்சியங்களையும் உடையவர்கள்.

👉 மனைவி வழியில் முன்னேற்றமான சூழல் அமையும்.

👉 கூட்டுத்தொழிலின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக