வெள்ளி, 12 ஜூன், 2020

வெற்றி நிச்சயம்... படித்ததில் பிடித்தது... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் வாங்க..!!

-----------------------------------------------------------------------

       இது சிரிப்பதற்கான நேரம் !!
-----------------------------------------------------------------------
சிவா : சார்! நீங்க எந்த கடவுளை கும்புடுவீங்க?
சக்தி : கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?
சிவா : கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.
சக்தி : கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான் ரொம்ப பிடிக்கும்.
சிவா : அப்போ பின்னாடி?
சக்தி : அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே இல்லை.....!!!
சிவா : 😂😂
-----------------------------------------------------------------------
அருண் : என் பொண்டாட்டிய விட பொண்டாட்டி புடவை அதிக மரியாதை தருது...
குமார் : அது எப்படி..?
அருண் : பீரோவ திறந்த உடனே அது என் கால்ல விழுது..
குமார் : 😆😆
-----------------------------------------------------------------------
ராமு : வரதட்சணையா வைரத்தை தர்றேன்னு சொல்லிட்டு கரியைத் தர்றீங்களே!
சோமு : இன்றைய கரி, நாளைய வைரமாச்சே!
ராமு : 😏😏
-----------------------------------------------------------------------
தீபக் : குரைக்கிற நாய் கடிக்காது.
ராஜு : எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற?
தீபக் : ஒரே சமயத்தில நாயால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான்.
ராஜு : 😜😜
-----------------------------------------------------------------------
            படித்ததில் பிடித்தது...!!
-----------------------------------------------------------------------
அவமானத்தை அனுபவமாக்கி கொண்டு...
தன்மானத்தை தனதாக்கி கொண்டு...
இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இரு...
வெற்றி நிச்சயம்...

நீ எவ்வளவு உயர்ந்தவன்? என்பது
உன் படிப்பிலோ...
அல்லது உன் பணத்திலோ...
அல்லது உன் அறிவிலோ அல்ல...
மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய்
என்பதில்தான் உள்ளது.
-----------------------------------------------------------------------
                  கேள்வி... பதில்...!!
-----------------------------------------------------------------------
1. ஆகாயத்தையே சொந்தமாக கொண்ட பறவை எது?

2. எடையுடைய வாசனைப் பொருள் எது?
-----------------------------------------------------------------------
                          பதில் :

1. வான்கோழி.
2. கிராம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்