>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 13 பிப்ரவரி, 2020

    குளுக்கோஸ்... இல்லன்னா முட்டைக்கோஸ்... என்னவா இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!
    டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க...
    நோயாளி : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்" சாப்பிடலாமா?
    டாக்டர் : 😩😩
    ----------------------------------------------------------------------------------------------------------
    டாக்டர் : தேள் கொட்டினதுக்கு இப்பதானே மருந்து வாங்கிக்கிட்டு போனீங்க, மறுபடியும் ஏன் கேக்குறிங்க?
    பாபு : மருந்து கொட்டிருச்சி டாக்டர்!
    டாக்டர் : 😳😳
    ----------------------------------------------------------------------------------------------------------
    உறவின் வலிமை...!!
    👉 மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பின் உணரலாம்...
    👉 மகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம்...
    👉 கணவனின் மாற்றத்தை மனைவி நோய்வாய்ப்படுதலில் உணரலாம்...
    👉 மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமை காலத்தில் உணரலாம்...
    👉 நண்பனின் மாற்றத்தை துன்ப காலத்தில் உணரலாம்...
    👉 சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்...
    👉 சகோதரியின் மாற்றத்தை சொத்து பரிமாற்றத்தில் உணரலாம்...
    👉 பிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்...
    ----------------------------------------------------------------------------------------------------------

    ஹா... ஹா... இது எப்படி இருக்கு?
    🕢 ஒரு நாளைக்கு இரண்டு தடவை ஏழரைய சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது... 30 வருஷத்துக்கு ஒரு தடவை ஏழரைய சந்திக்கிற நாமதான் பரிகாரத்தை தேடி ஓடுறோம்...🕢
    ----------------------------------------------------------------------------------------------------------
    இதை மட்டும் செய்யாதீர்கள்...!!
    ⭐ உனக்கு உதவியவரை ஒருபோதும் மறக்காதே...
    ⭐ உன்மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே...
    ⭐ உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே...
    ----------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.

    விளக்கம் :

    ஆடம்பரச் செலவு செய்து, ஆராய்ந்து நீதி வழங்காத அரசு, தாமாகவே தாழ்ந்த நிலையை அடைந்து கெட்டுவிடும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக