>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 8 ஜூலை, 2020

    வாழ்க்கையை யார் ஜெயிக்கிறார்கள் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

    -------------------------------------------------------------
    கலக்கலான காமெடிகள்...!!
    -------------------------------------------------------------
    அப்பா : என்னடா ஆன்லைன் கிளாஸ்-னு சொல்லிட்டு கேம் விளையாடிக்கிட்டு இருக்குற?...
    மகன் : அப்பா இது PET பீரியட்..
    அப்பா : 😳😳
    -------------------------------------------------------------
    பாட்டி : எப்போ பாத்தாலும் ஊரையே சுத்திக்கிட்டு இருக்கான்... ஒரு கல்யாணம் பண்ணி வெச்சாதான் சரியா வருவான்.
    பேரன் : கல்யாணம் வேணாம் பாட்டி... ஒரு ரிமோட் கார் வாங்கிக் கொடுங்க... வீட்டுலையே இருக்கேன்...
    பாட்டி : 😶😶
    -------------------------------------------------------------
    வாழ்க்கையை ஜெயிப்பது யார்?
    -------------------------------------------------------------
    👉 வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்கள்
    வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்.

    👉 வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள்
    வாழ்க்கையையே ஜெயிக்கிறார்கள்...
    -------------------------------------------------------------
        குறளும்... பொருளும்...!!
    -------------------------------------------------------------
    அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.

    விளக்கம் : 

    தீமை செய்தவருக்கு அதையே திருப்பி செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
    -------------------------------------------------------------
            சிறந்த வரிகள்...!!
    -------------------------------------------------------------
    🌟 உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள்...

    🌟 முடிந்து போன விஷயங்களை பற்றி கவலைப்படுவதுடன் செய்ய வேண்டியதை பற்றி திட்டமிடுங்கள்...

    🌟 பாதியில் விட்டுப்போக எண்ணாதீர்கள்...

    🌟 முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள்...

    🌟 கேள்வி கேட்க பயப்படாதீர்கள்...

    🌟 அனைவரையும் சமமாக நடத்துங்கள்..

    🌟 மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...!!
    -------------------------------------------------------------
             விடுகதைகள்...!!
    -------------------------------------------------------------
    1. பட்டினி கிடந்தாலும் பருத்த வயிறு குறையாது. அது என்ன?

    2. கறுப்பு மாமா பச்சை குடை பிடிக்கிறார். அவர் யார்?

    3. நெட்டை அக்கா தாக்குகிறாள், குட்டை அக்கா தாங்குகிறாள். அவர்கள் யார்?

    4. பூ உண்டு செடியில்லை, தலை உண்டு உடம்பு இல்லை. அது என்ன?

    விடை : 

    1. பானை
    2. பனங்காய்
    3. உரல், உலக்கை
    4. நாணயம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக