Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜூலை, 2020

7-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் வலிமையான கிரகமாக திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனிபகவான் தருவார்.

எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக்கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீP சனீஸ்வர பகவான் ஆலயம்.

இங்கே கோவில் கொண்டு அருள்புரியும் சனிபகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று எல்லா துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.

லக்னத்திற்கு 7-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் அரசனைப்போல் வாழ்வார்கள்.

7ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 உழைப்பிற்கேற்ற வருவாய் இல்லாத நிலை ஏற்படும்.

👉 செல்வ செழிப்பு மேம்படும்.

👉 மனதில் பலவகையான சிந்தனைகளை கொண்டவர்கள்.

👉 கூட்டுத்தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.

👉 எதிலும் நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 தனிமையை விரும்புபவர்கள்.

👉 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

👉 காது தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 வெளிநாட்டு வர்த்தக தொடர்பு கொண்டவர்கள்.

👉 நளினமான குணநலன்களை உடையவர்கள்.

👉 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

👉 மன உறுதி உடையவர்கள்.

👉 எதிலும் திருப்தி இல்லாதவர்கள்.

👉 எதையும் கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்.

👉 சுகபோகங்களுடன் வாழக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!